வாங்குறது வாங்குறோம் ஒன்பிளஸே வாங்குவோம்- மிகப்பெரிய தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் 9ஆர்: அமேசானில் அதிரடி சலுகை!

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தளத்தில் பல ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு தங்களது ஒன்பிளஸ் சாதனத்தை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாகும். மேம்பட்ட அம்சங்களோடு ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், சிறந்த ஒன்பிளஸ் சாதனத்தையே சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒன்பிளஸ் 9 ஆர் சாதனம் தற்போது வெறும் ரூ.36,999-க்கு கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகையுடன் இந்த சாதனத்தை ரூ.34,999 என வாங்கலாம்.

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் விலை

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் விலை

ஒன்பிளஸ் 9 தொடரின் கீழ் ஒன்பிளஸ் 9ஆர்டி என அழைக்கப்படும் மற்றொரு மாதிரியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது 9 தொடரில் கிடைக்கும் மற்ற மாடல்களை விட மலிவான சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 ஆர் சாதனத்தை தற்போது வாங்க சரியான வாய்ப்பு இதுவாகும். அமேசான் கிரைட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் 9ஆர் விலை குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் 9ஆர் அடிப்படை வேரியண்ட் ஆக 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. தற்போது இந்த சாதனம் ரூ.36,999 ஆக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.39,999 ஆகும். சிட்டி வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் விலை ரூ.34,999 ஆக வாங்கலாம்.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

மறுபுறம் உயர்நிலை சாதனமான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43,999 ஆக இருக்கிறது. இதன் தள்ளுபடி விலை ரூ.40,999 என கிடைக்கிறது. உயர் ரக மாடல் விலை ரூ.38,999 ஆக இருக்கிறது. ஒன்பிளஸ் 9 ஆர் கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட பதிப்பு

மேம்படுத்தப்பட்ட பதிப்பு

ஒன்பிளஸ் 9 ஆர்டி ஆனது ஒன்பிளஸ் 9 ஆர் சாதனத்தைவிட மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி எஸ்டி888 சிப்செட் மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்களோடு இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி இந்தியா அறிமுகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உயர்ரக ஸ்மார்ட்போன்கள் தேவை இருக்கும்பட்சத்தில் ஒன்பிளஸ் 9 ஆர் சாதனம் நல்ல தேர்வாக இருக்கும். ஒன்பிளஸ் 9 ஆர் விலை ரூ.34,999 ஆக இருக்கிறது.

6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் 9 ஆர் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஃப்ளூயட் அமோலெட் 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மற்றும் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா அம்சங்களோடு வருகிறது.

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

இதில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, விசி கூலிங் தொழில்நுட்பம் மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த சாதனம் 65 வாட்ஸ் வார்ப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இது வருகிறது. ஒன்பிளஸ் 9 ஆர் டி வெளியீட்டு தேதி அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சீன நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. புதிய ஒன்பிளஸ் போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்தப்பட்டதாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதோடு, ஒன்பிளஸ் 9 ஆர்டியின் சில அறிக்கையிடப்பட்ட விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்த ஒன்பிளஸ் சில படங்களை வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ஆர்டியின் வெளியீட்டு தேதி

ஒன்பிளஸ் 9 ஆர்டியின் வெளியீட்டு தேதி

வெய்போவில், ஒன்பிளஸ் 9 ஆர்டியின் வெளியீட்டு தேதியை அறிவிக்க ஒன்பிளஸ் டீஸரை வெளியிட்டது. வெளியீட்டு நிகழ்வு சீனாவில் அக்டோபர் 13 ஆம் தேதி அன்று மாலை 7:30 மணிக்கு CST ஆசியாவில் (மாலை 5 மணி IST) நடைபெறும். OnePlus 9RT உடன் இணைந்து, OnePlus Buds Z2 ஐ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ட்ருலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸாக அறிமுகப்படுத்தும், வெய்போவில் வெளியிடப்பட்ட டீஸர் மூலம் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தி அதன் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Now You Can Get Oneplus 9R Smartphone at Discount Price: Amazon Great Indian Festival Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X