திடீர்னு ரூ.8,999 விற்கப்படும் Redmi ஸ்மார்ட்போன்.. சைலன்ட்-ஆ Amazon பார்த்த வேலை.. என்ன மாடல்?
இந்த ஜூலை மாதத்தில் ஒரே ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகமானது. இன்னும் சொல்லப்போனால் இந்த மாதத்தில், உலகளவில் மொத்தம் 4 புதிய ரெட்மி பிராண்டட் தயாரிப்புகள் மட்டுமே அறிமுகமாகின. இந்தியாவில் ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) அறிமுகமானது. பின்னர் சீனாவில் ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) அறிமுகமானது. பின்னர் மிகவும் சமீபத்தில் ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) டேப்லெட்கள் இந்தியாவில் அறிமுகமானது.
இப்போதைக்கு வேறு எந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுகமாகும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் மிகவும் பிரபலமான ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விலை குறைப்பு அல்ல. அமேசான் இந்தியா வலைதளத்தின் பிரத்யேக கூப்பன் ஆபர் ஆகும். அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? திடீர் கூப்பன் ஆபரை பெற்றுள்ளது ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் தான். இதுவொரு தற்காலிக விலைக்குறைப்பாகும். அமேசான் வலைத்தளமானது இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 நேரடி கூப்பன் தள்ளுபடியை வழங்குகிறது. இதன்கீழ் ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரூ.1000 கூப்பன் தள்ளுபடியுடன் சேர்த்து, ரெட்மி 12 ஸ்மார்ட்போனை அமேசான் பே (Amazon Pay) பேலன்ஸ் வழியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.499 கேஷ்பேக் கிடைக்கும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளிலும் சில சலுகைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, ஆர்வமுள்ள பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.8,499 வரை கொண்டு செல்ல முடியும்.
ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.79-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட், 50 எம்பி ப்ரைமரி + 8எம்பி அல்ட்ராவைட் + 2எம்பி மேக்ரோ கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 18W ஃபாஸ்ட்-வயர்டு சார்ஜிங் உடன் 5000 mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் அறிமுகமான ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், 6.79-இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5030mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








