இதை விட ஒரு நல்ல சான்ஸ் இனி கிடைக்காது! முதல் முறையாக ரூ.60,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்த iPhone 14!

|

ஒருவழியாக, ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 14 மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் iPhone 14 ஆனது அறிமுகமான நாளில் இருந்து, தற்போது தான் முதல் முறையாக இந்த மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

இது எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றுள்ளது? ஐபோன் 14 மீது வேறு என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கிறது? இந்த மாடலை ரூ,60,000 பட்ஜெட்டில் வாங்குவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இதைவிட ஒரு சிறந்த நேரம் இனி அமையாது!

இதைவிட ஒரு சிறந்த நேரம் இனி அமையாது!

பல காலமாக ஒரு லேட்டஸ்ட் ஐபோனை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சரி.. அல்லது பழைய ஐபோனில் இருந்து புதிய மாடலுக்கு அப்கிரேட் ஆக விரும்பினாலும் சரி.. இதைவிட ஒரு சிறந்த நேரம் இனி கிடைக்குமா என்று கூற முடியாது!

ஏனெனில் பிரபல இ-காமர்ஸ் அமேசான் வலைத்தளம் ஆனது ஐபோன் 14 மாடல் மீது நேரடி தள்ளுபடி, "பெரிய மதிப்பிலான" எக்ஸ்சேன்ஜ் சலுகையை அறிவித்துள்ளது!

15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!

ஐபோன் 14 மீது கிடைக்கும் நேரடி தள்ளுபடி!

ஐபோன் 14 மீது கிடைக்கும் நேரடி தள்ளுபடி!

அமேசான் வலைத்தளம் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடலை ரூ. 77,400 க்கு விற்பனை செய்கிறது.

அதாவது ஐபோன் 14 மாடலின் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ. 2,500 என்கிற நேரடி தள்ளுபடியை பெறுகிறது. நினைவூட்டும் வண்ணம், முன்னதாக இதே வேரியண்ட் - ரூ.79,900 க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலைக்குறைப்பை விட... எக்ஸ்சேன்ஜ் ஆபர் தான் ஹைலைட்!

விலைக்குறைப்பை விட... எக்ஸ்சேன்ஜ் ஆபர் தான் ஹைலைட்!

அமேசான் வழியாக ஐபோன் 14 மீது கிடைக்கும் ஒரே ஒரு ஆபர் - விலைக்குறைப்பு மட்டுமே அல்ல! இன்னொரு சிறப்பான சலுகையும் அணுக கிடைக்கிறது. அது - எக்ஸ்சேன்ஜ் சலுகை ஆகும்!

இதன் கீழ் நீங்கள் லேட்டஸ்ட் ஐபோன் 14 மாடலை வெறும் ரூ.61,100 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும். அதாவது அமேசான் வலைத்தளமானது ஐபோன் 14 மீது ரூ.16,300 என்கிற எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

உங்களின் பழைய போன் நன்றாக வேலை செய்தால்?

உங்களின் பழைய போன் நன்றாக வேலை செய்தால்?

அறியாதோர்களுக்கு, எக்ஸ்சேஞ்ச் ஆபர் என்றால் நீங்கள் வாங்கும் புதிய மொபைலின் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பதிலாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுப்பதே ஆகும். ஆனால் இது அவ்வளவு எளிதாக பெறக்கூடிய ஒரு சலுகையாக இருக்காது!

நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் உங்கள் பழைய ஸ்மார்ட்போன் ஆனது நன்றாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். வெளிப்புற மற்றும் உட்புற சேதங்கள் என எதுவுமே இருக்க கூடாது; மீறி இருந்தால் அந்த அடிப்படையில் உங்களுக்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கணக்கிடப்படும்.

ஒரு குறையும் இல்லாத பட்சத்தில் தான், உங்களுக்கு 100% எக்ஸ்சேன்ஜ் மதிப்பு கிடைக்கும். இப்படியாகத்தான் நீங்கள் ஐபோன் 14 மாடலை ரூ.60,000 என்கிற பட்ஜெட்டிற்குள் கொண்டு வர முடியும்!

ஐபோன் 14-இன் முக்கிய அம்சங்கள்:

ஐபோன் 14-இன் முக்கிய அம்சங்கள்:

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான iPhone 14 ஆனது 6.1 இன்ச் அளவிலான OLED டிஸ்ப்ளேவுடன் (1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் டால்பி விஷன்) வருகிறது.

இந்த மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த A15 பயோனிக் SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5-கோர் GPU உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் புதிய 12MP கேமராக்கள் உள்ளன மற்றும் இது ஒப்பீட்டளவில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைஃப்பையும் வழங்குகிறது!

Best Mobiles in India

English summary
Now you can buy latest iPhone 14 for just Rs 61000 in Amazon using both price cut and exchange offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X