இப்போது வெறும் ரூ.249/-க்குள் பீச்சர் மொபைல் ஒன்றை வாங்கலாம்.!

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் தான், தற்போது வரையிலாக இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் மிக மலிவான பீச்சர் மொபைல் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது மிகவும் தவறாகும்.

நம்பினால் நம்புங்கள் இந்த நாட்களில், நீங்கள் வெறும் ரூ.249/-க்கு ஒரு பீச்சர் மொபைலை வாங்க முடியும். நிச்சயமாக, அந்த சாதனங்கள் 4ஜி திறன்களை கொண்டு வரவில்லை, ஆனால் உங்களின் அழைப்பு மற்றும் இதர அடிப்படையான தேவைகளை கையாள உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

எங்களின் மூன்று பரிந்துரைகள்

எங்களின் மூன்று பரிந்துரைகள்

ஒருவேளை உங்கள் இரண்டாம் சிம் கார்டிற்கான பீச்சர் போன் போன் ஒன்றை வாங்க விரும்பினால் எங்களின் இந்த மூன்று பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். விவா வி1, ஐகால் கே71 மற்றும் பீஸ் பி3310 ஆகிய மூன்று சாதனங்களுமே வெறும் 500 ரூபாய்க்கும் குறைவான விலை நிர்ணயத்தையே பெற்றுள்ளன.

ஐகால் கே71 (iKall K71)

ஐகால் கே71 (iKall K71)

ஐகால் கே71 ஆனது பிரத்தியேகமாக ஷாப்க்ளூஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் ஒரு பீச்சர் மொபைல் ஆகும். இதன் விலை நிர்ணயம் ரூ.249/- ஆகும். அம்சங்களை பொறுத்தமட்டில், இது 800எம்ஏச் பேட்டரித்திறன் கொண்டு இயங்கும் ஒரு ஒற்றை சிம் சாதனமாகும். இது நான்கு மணி நேர பேச்சு மற்றும் 24 மணி நேர காத்திருப்பு நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஒரு ஆண்டு உத்தரவாதம்

ஒரு ஆண்டு உத்தரவாதம்

மேலும் ஐகால் கே71 ஆனது 1.4 அங்குல மோனோக்ரோம் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் எஃப்எம் ரேடியோ மற்றும் டார்ச் ஆகியவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. இது அதிர்வு முறைக்கு (வைப்ரேஷன்) ஆதரவளிக்கிறது. இக்கருவி பிஸ் (BIS) மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் அடர் நீளம் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இக்கருவிக்கு ஒரு ஆண்டு உத்தரவாதமும் உண்டு.

விவா வி1

விவா வி1

விவா வி1 ஆனது ரூ.349/-க்கு வாங்க கிடைக்கிறது. இக்கருவியும் இந்தியாவில் ஷாப்க்ளூஸ் வழியாக பிரத்தியேக வாங்க கிடைக்கிறது. இந்த 2ஜி பீச்சர் மொபைல் ஆனது 1.44 அங்குல மோனோக்ரோம் டிஸ்ப்ளே மற்றும் ஒரு கீபேட் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில், வைப்ரேஷன், எப்எம் ரேடியோ, டார்ச்லைட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஒரு 650எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இக்கருவி நோக்கியா 3310 கொண்டுள்ள ஸ்நேக் கேமை ப்ரீ-லோடட் கேமாக கொண்டுள்ளது. மேலும் இந்த விவா வி1 ஆனது எஸ்எம்எஸ், போன் புக், கால்குலேட்டர், காலெண்டர் மற்றும் பல அம்சங்களை ஆதரிக்குமொரு ஒற்றை சிம் கருவியாகும். விவா வி1 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ப்ளூ மற்றும் ஆரஞ்சு வண்ண வகைகளில், ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் கிடைக்கிறது

பீஸ் பி3310

பீஸ் பி3310

பீஸ் பி3310 ஆனது ரூ.499/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. இக்கருவியும் ஷாப்க்ளூஸ் வலைத்தளத்தில் பிரத்யேகமாக ரூ.349/- என்கிற தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். பார் டிஸைன் கொண்டுள்ள இக்கருவி 1.44 அங்குல டிஸ்பிளே, 2ஜி, ஒற்றை சிம், 850எம்ஏஎச் பேட்டரி, எப்எம் ரேடியோ மற்றும் எல்.ஈ.டி டார்ச் ஆகிய அம்சங்களுடன் ஆரஞ்சு நிறம் விருப்பத்தில் கிடைக்கிறது உடன் ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Now you can buy a feature phone for as low as Rs 249. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X