மாப்பு.. 4ஜி போனுக்கும், 3GB ரேம் போனுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு.. புது 5ஜி போன் வாங்கிய கஸ்டமர்கள் பெருமூச்சு!
தொடரும் ஸ்மார்ட்போன் விலை உயர்வால் (Smartphone Price Hike), வேறு வழி இல்லாமல் அதிக விலைக்கு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கிவிட்டு.. "நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா?" என்று கதறிய கஸ்டமர்களுடன்.. பட்ஜெட் வாசிகளும் கூட்டு சேரும் நிலை உருவாகி உள்ளது.
பெரிய அளவிலான ஸ்டோரேஜ் கொண்ட மாடல்கள் மற்றும் 5ஜி போன்களின் விலைகள் தான் அதிகரிக்கிறது என்று பார்த்தால்.. ஆரம்ப நிலை (entry-level) மாடல்களான ரெட்மி ஏ7 4ஜி (Redmi A7 4G) மற்றும் ரெட்மி ஏ 7 ப்ரோ 4ஜி (Redmi A7 Pro 4G) ஆகியவற்றின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.

மெமரி தொடர்பான தட்டுப்பாட்டினால், பெரும்பாலான நிறுவனங்கள் (ரெட்மி உட்பட) ஸ்மார்ட்போன்களின் விலைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை மாற்றம் பெரிய அளவில் ஆச்சரியமளிப்பதாக இல்லை. ஆனால் இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களின் பிரிவிற்கும் இறங்கி வந்துள்ளது - கவனிக்கத்தக்க மாற்றம் ஆகும். முக்கியமான ரெட்மி ஏ7 4ஜி மாடலானது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வகையில் (variant) மட்டுமே வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில்தான் சாம்சங் மற்றும் போக்கோ நிறுவனங்கள் கூட தத்தம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி இருந்தன. அதை தொடர்ந்தே ரெட்மி நிறுவனத்தின் விலை உயர்வு வந்துள்ளது. இதன்கீழ் ரெட்மி ஏ7 4ஜி சீரீஸின் கீழ் உள்ள 2 மாடல்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன:
ரெட்மி ஏ7 4ஜி (Redmi A7 4G) அசல் விலை VS புதிய விலை: நினைவூட்டும் வண்ணம் இது ரூ.10,499 க்கு அறிமுகம் ஆனது. பின்னர் ரூ.1000 அதிகரிப்பின் கீழ் ரூ.11,499 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் ரூ.1000 விலை உயர்ந்து ரூ.12,499 க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.2000 விலை உயர்ந்துள்ளது.
ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி (Redmi A7 Pro 4G) அசல் விலை VS புதிய விலை: நினைவூட்டும் வண்ணம் இது ரூ.11,499 க்கு அறிமுகம் ஆனது. பின்னர் ரூ.1000 அதிகரிப்பின் கீழ் ரூ.12,499 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் ரூ.1000 விலை உயர்ந்து ரூ.13,499 க்கு விற்கப்படுகிறது. இதுவும் ரூ.2000 விலை உயர்ந்துள்ளது.
மேலோட்டமாக பார்த்தால், ரூ.2000 என்கிற விலை உயர்வு பெரியதாக தெரியாவிட்டாலும், ரூ.12,000 க்கு குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போன் தேடும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வுகளை மேலும் குறைக்கிறது. அதாவது ரூ.12000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி பிராண்டின் கீழ் வேலை இருக்காது. அவர்கள் லாவா அல்லது ஏஐ பிளஸ் போன்ற நிறுவனங்களின் பக்கம் செல்ல வேண்டி இருக்கும்.
என்னென்ன அம்சங்கள்? ரெட்மி ஏ7 ப்ரோ மாடலில் 6.9-இன்ச் (1600 x 720 பிக்சல்ஸ்) எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உடன், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், TÜV ரைன்லேண்ட் சர்க்காடியன் ஃப்ரெண்ட்லி, TÜV ரைன்லேண்ட் ஃப்ளிக்கர் ஃப்ரீ, டிசி டிம்மிங்) உள்ளது. ரெட்மி ஏ7 மாடலில் 6.88-இன்ச் (1600 x 720 பிக்சல்ஸ்) எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்) உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இரண்டுமே மாலி-G57 MP1 ஜிபியு உடனான 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் T7250 12என்எம் சிப்செட் உள்ளது இரண்டுமே 3ஜிபி / 4ஜிபி LPDDR4X ரேம், 64ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி உடன் வருகின்றன. இரண்டுமே டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி) ஆதரவை வழங்குகின்றன.
ஆனால் ஓஎஸ்-ல் வேறுபாட்டை கொண்டுள்ளன. ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் ஆனது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் (ஆண்ட்ராய்டு 15) வருகிறது, மறுகையில் உள்ள ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 உடன் (ஆண்ட்ராய்டு 16) வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ7 4ஜி மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஆகிய இரண்டுமே எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ரியர் கேமரா, இரண்டாம் நிலை கேமரா, எல்இடி ஃபிளாஷை கொண்டுள்ளன, முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. 3.5மிமீ ஆடியோ ஜாக், எப்எம்ரேடியோ, கீழ்ப்புறத்தில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற பொதுவான அம்சங்களுடன் வந்தாலும் அளவீடுகளில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளன.
ரெட்மி ஏ7ஆனது 171.79×79.77×8.26மிமீ மற்றும் 193 கிராம் எடையை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி ஏ7 ப்ரோ ஆனது 171.56×79.47×8.15 மிமீ மற்றும் 208 கிராம் எடையை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற பொதுவான அம்சங்களை பொறுத்தவரை தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP52 ரேட்டிங் உடன் வருகின்றன. மேலும் டூயல் 4G வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி 2.4GHz/5GHz, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
கடைசியாக பேட்டரி. இதிலும் முக்கிய வேறுபாடு உள்ளது. ரெட்மி ஏ7 4ஜி மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வந்தாலும், ரெட்மி ஏ7 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5200mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6300mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications