Home
Mobile

ரூ.5000, ரூ.6000 இல்ல.. அதுக்கும் மேல.. Nothing Phone 2 மீது மீண்டும் விலை குறைப்பு.. புதிய விலை என்ன?

ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இந்தியாவில் ​​அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு, நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் மீது நிரந்தர விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக நத்திங்கின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கியது.

இதற்கிடையில், நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a ) அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களே ஆகும் நிலையில், நத்திங் போன் 2-வின் விலை இன்னும் குறைந்துள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில், நத்திங் போன் 2 மாடலானது நேரடி தள்ளுபடியை பெற்று "நம்ப முடியாத" ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

Nothing Phone 2 மீது மீண்டும் விலை குறைப்பு!

பிளிப்கார்ட்டில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், 2023 ஜூலையில் வெளியான போது இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை (Original Launch Price) ரூ.44,999 ஆக இருந்தது.

பின்னர் 2023 டிசம்பரில் ரூ.5000 என்கிற நிரந்தர விலைக்குறைப்பை பெற்றது. அதன் விளைவாக நத்திங் போன் 2 மாடலின் ஆரம்ப விலை ரூ.39,999 ஆக குறைந்தது. தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.36,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒட்டுமொத்தமாக நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8000 குறைந்துள்ளது.

Nothing Phone 2 மீது மீண்டும் விலை குறைப்பு!

நம்பி வாங்க 4 காரணங்கள்; வாங்காமல் தவிர்க்க 1 காரணம்: நல்ல ஆபர் விலைக்கு வந்துள்ள நத்திங் போன் 2 மாடலை நம்பி வாங்கலாமா? அல்லது வாங்காமல் தவிர்த்து விடலாமா? என்கிற சந்தேகங்கள் உங்களுக்குள் இருந்தால்.. நத்திங் போன் 2 மாடலை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 அட்டகாசமான காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 1 நியாயமான காரணமும் இதோ:

நம்பி வாங்குவதற்கான காரணங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2 மாடலானது உண்மையிலேயே மிகவும் க்ளீன் ஆன சாஃப்ட்வேரை கொண்டுள்ளது; கூடவே அட்டகாசமான மற்றும் தனித்துவமான டிசனையும் கொண்டுள்ளது. மேலும் இது திடமான செயல்திறனை வழங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்பை பேக் செய்கிறது. இது நல்ல பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது; கூடவே ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி லைஃப்பையும் உறுதி செய்கிறது.

Nothing Phone 2 மீது மீண்டும் விலை குறைப்பு!

வாங்காமல் தவிர்ப்பதற்கான காரணத்தை பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது போட்டோ மற்றும் வீடியோ ஆர்வலர்களை கவரும்படி இல்லை. இது விலைக்கு ஏற்ற கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, இதே செக்மென்ட்டில் கிடைக்கும் மற்ற போன்களை போன்ற அவுட்புக்களை வழங்கவில்லை. இதே விலை வரம்பில் பலதரப்பட்ட கேமரா செட்டப்களில் நல்ல-நல்ல கேமரா செட்டிங்ஸ் மற்றும் சிறந்த லோட்-லைட் பெர்ஃபார்மென்ஸ் உள்ளது.

நத்திங் போன் 2-வின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Now Nothing Phone 2 is Rs 8000 Cheaper Than Original Price 4 Reasons to buy And 1 reason to skip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X