Home
Mobile

முட்டி மோதி ஆர்டர் போட்றாங்க.. ஒரிஜினல் விலையை விட ரூ.15,000 கம்மியான Moto போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபலமான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது இரண்டாவது முறையாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அது என்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? முதலில் எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றது? தற்போது எவ்வளவு பெற்றுள்ளது? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? மோட்டோ ரேஸர் 40 (Moto Razr 40) ஸ்மார்ட்போன் தான் இரண்டாவது முறையாக விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோட்டோ ரேஸர் 40 ஸ்மார்ட்போன் அதன் முதல் விலைக்குறைப்பை பெற்றது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டது.

ஒரிஜினல் விலையை விட ரூ.15,000 கம்மியான Moto போன்!

தற்போது மோட்டோ ரேஸர் 40 மீது மேலும் ரூ.5,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.59,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ரேஸர் 40 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.49,999 க்கு இறங்கி வந்து, தற்போது ​​இரண்டாவது விலைக்குறைப்பிற்கு பிறகு ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ரேஸர் 40 ஸ்மார்ட்போனின் இந்த புதிய விலை நிர்ணயம் மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (Motorola India Website) பிரதிபலிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் சேஜ் க்ரீன் (Sage Green), சம்மர் லிலாக் (Summer Lilac) மற்றும் வெண்ணிலா க்ரீம் (Vanilla Cream) என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரிஜினல் விலையை விட ரூ.15,000 கம்மியான Moto போன்!

மோட்டோ ரேஸர் 40 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூசன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடைந்தன 6.9 இன்ச் FlexView FHD+ மெயின் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கூடுதலாக, இது 368 x 194 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் (Corning Gorilla Glass Victus) உடனான 1.47-இன்ச் எக்ஸ்டெர்னல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. மோட்டோரோலாவின் இந்த டபுள் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (octa-core Qualcomm Snapdragon 7 Gen 1 chipset) மூலம் இயக்கப்படுகிறது

ஒரிஜினல் விலையை விட ரூ.15,000 கம்மியான Moto போன்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ரேஸர் 40 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 64MP மெயின் சென்சார் (f/1.7) மற்றும் 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்பீக்களுக்காக, இது 32MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

டால்பி அட்மோஸால் ட்யூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dolby Atmos Stereo Speakers), பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 4200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங்கை (Wireless Charging) ஆதரிக்கிறது.

ஒரிஜினல் விலையை விட ரூ.15,000 கம்மியான Moto போன்!

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி விற்பனையும் ஆரம்பம்! மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடலின் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 256ஜிபி (68W சார்ஜர்) ஆப்ஷன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் 12ஜிபி + 256ஜிபி (125W சார்ஜர்) ஆப்ஷன் ரூ.35,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டுமே லக்ஸே லேவண்டர் (Luxe Lavender), மூன்லைட் பேர்ல் (Moonlight Pearl) மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளன.

Best Mobiles in India

English summary
Now Its Rs 15000 Less Than Original Launch Price Moto Razr 40 Foldable Smartphone get 2nd Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X