ஆன்லைன் வலைத்தளத்தில் தென்படும் எச்டிசி 8-எக்ஸ்!

Posted By:

ஆன்லைன் வலைத்தளத்தில் தென்படும் எச்டிசி 8-எக்ஸ்!
விண்டோஸ்-8 இயங்குதளத்தில் அனைவராலும் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ஒரு சிறந்த இடம் இருக்கிறது. விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன், தனது வருகையின் மூலம் ஏக குஷியை அள்ளித் தரும்.

ஆன்லைன் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதாக ஒரு சேதி வெளியாகி இருக்கிறது. சாம்சங் ஆம்னியா, லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களெல்லாம் மக்கள் வரவேற்பையும், அதிக ஆதரவையும் பெற்ற ஸ்மார்ட்போன்கள் என்று கூறலாம். இதை தொடர்ந்து எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனும் அந்த பட்டியலில் இடம் பெறும் என்று கூறலாம்.

ஆன்லைனின் தரிசனம் தரும் ஸ்மார்ட்போன்கள் ஏராளம். இப்போது எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கு ஆன்லைனில் தலைகாட்டுகிறது போலும். இந்த 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினையும், இந்த திரையின் மூலம் எஸ்-எல்சிடி-2 தொடுதிரை தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனின் திரையில் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

8 மெகா பிக்ஸல் கேமரா, 2.1 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, 3ஜி நெட்வொர்க் வசதி என்று சகலமும் இந்த ஸ்மார்ட்போனில் அடங்கும். இதில் இன்னும் வைபை தொழில் நுட்ப வசதியினையும் எளிதாக பெறாலம். ஆன்லைன் விற்பனை சேவையினை வழங்கும் ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனை பெறலாம். ஆன்வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 35,032 விலையினை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்