மூன்று சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் ஜி'ஃபைவ் மொபைல்!

By Super
|
மூன்று சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் ஜி'ஃபைவ் மொபைல்!

சீன நிறுவனமான ஜி'ஃபைவ் இதுவரை சிறந்த மொபைல்களை கொடுத்து கொண்டிருக்கின்றது. நிறைய டியூவல் சிம் மொபைல்களை கொடுத்த ஜி'ஃபைவ் இப்பொழுது ஒரு டியூவல் சிம் மொபைலையும், ஒரு டிரிப்பிள் சிம் மொபைலையும் வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டுள்ளது.

ஜி'ஃபைவ்-303, ஜி'ஃபைவ்-616 என்ற பெயர்களில் இந்த புதிய மொபைல்கள் வந்துள்ளன. இந்த இரண்டு மொபைல்களிலும் ஒரு இன்பகரமான விஷயம் என்னவென்றால், இதன் வடிவமைப்பு காஸ்ட்லி விலை கொண்ட மொபைல் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இது மிக நுட்பமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

303 மொபைல் டியூவல் சிம் பொருத்தும் வசதி கொண்டதாகவும், 616 மொபைல் மூன்று சிம் பொருத்தும் வசதி கொண்டதாகவும் இருக்கிறது. இது போன்ற 3 நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் மொபைல்கள் மார்கெட்டில் இருக்கின்றது தான். ஆனாலும் டியூவல் சிம் மொபைல்களுக்கு ஒப்பிட்டு பார்க்கையில், மூன்று சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்ட மொபைல்களின் எண்ணிக்கை மார்கெட்டில் குறைவு தான்.

தொடுதிரை வசதி கொண்ட ஜிஃபைவ்-303 மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. 303 மொபைலில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸல் கேமராவுடன், இன்னொரு செகன்டரி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டதால், இரண்டு நெட்வொர்க் வசதியை பெற முடியும்.

கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட இந்த ஜி'ஃபைவ்-616 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதியையும் வழங்குகிறது. இந்த மொபைலில் டிஜிட்டல் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டடுள்ளது. 303 மொபைல் 850 எம்ஏஎச் பேட்டரியை கொண்டது. அதோடு இந்த மொபைல் இன்னாரு 700 எம்ஏஎச் பேட்டரியையும் கொடுக்கிறது.

ஜி'ஃபைவ் மொபைலில் 900 எம்ஏச் பேட்டரியை கொடுக்கிறது. இந்த இரண்டு மொபைல்களையுமே மலிவு விலையில் பெற முடியும். ஜி'ஃபைவ் 303 மொபைல் கிட்டதட்ட ரூ.4000 விலையிலும் மற்றும், ஜி'ஃபைவ் 616 மொபைல் ரூ.3,000 ஒட்டிய விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X