அதிரடியாக 2 ஸ்மார்ட்மொபைல்களை கொடுக்கும் ஹுவெய்!

By Super
|
அதிரடியாக 2 ஸ்மார்ட்மொபைல்களை கொடுக்கும் ஹுவெய்!

தனது க்ளவுட் சேவை வசதி கொண்ட 2 புதிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக ஹுவெய் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் மொபைல்கள்.

சோனிக் மொபைல் என்ற பெயரில் வந்துள்ள ஒரு மொபைல் 3.5 இஞ்ச் மல்டி டச் தொழில் நுட்பம் கொண்டது.

ஐடியோஸ் எக்ஸ்-3 என்ற பெயரில் வந்துள்ள மற்றொன்று 3.2 இஞ்ச் எச்விஜிஏ திரையை கொண்டிருக்கிறது.

சோனிக் மொபைல் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஐடியோஸ் எக்ஸ்-3 மொபைல் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் துணைகொண்டு இயங்குகிறது.

ஹுவெய் சோனிக் மொபைலில் 4ஜிபி கார்டு வசதி உள்ளது. அது மட்டும் அல்லாது இந்த மொபைலில் கூடுதலாக 20ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

இதே போல 20ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் வசதியை ஐடியோஸ்

மொபைலும் கொண்டுள்ளது.

சோனிக் மொபைலில் 1,400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஹுவெய் ஐடியோஸ் எக்ஸ்-3 மொபைல் புதிய 3டி தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது.

இதில் 3.2 கேமராவும், விஜிஏ முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சோனிக் மொபைல் ரூ.9,500 ஒட்டிய விலையிலும், ஹுவெய் ஐடியோஸ் எக்ஸ்-3 மொபைல் ரூ.10,500 ஒட்டிய விலையிலும் கிடைக்கும்.

ஹுவெய் சோனிக் மொபைலைவிட, ஹுவெய் ஐடியோஸ் எக்ஸ்-3 மொபைல் கூடுதல் வசதியை கொண்டுள்ளது.

இதனால் சோனிக் மொபைலின் விலையை விட ஐடியோஸ் மொபைல் கொஞ்சம் அதிக விலையையும் கொண்டதாக இருக்கிறது.

இந்த இரண்டு மொபைல்கள் அல்லாமல் அடுத்ததாக மீடியாபேட் லேப்டாப் ஒன்றை வழங்க இருக்கிறது ஹுவெய்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X