'பீர்' இருந்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம் : புது டெக்னிக்!

Posted By:

ஒரு அமெரிக்க நிறுவனம் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய செல்போனை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாமாம்.

இதற்கு எபிபானி ஒன் puck என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம், அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து மொபைல் போனுக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

குளு குளு 'கூகுள்' அலுவலகம் : இது புதுசு கண்ணா புதுசு!

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு தகவல்கள், செயல்படும் விதங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
onE Puck சாதனம்:

'பீர்' இருந்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம்

இதுவொரு எளிய சாதனம். எடை குறைவானது. எடுத்துச்செல்வது மிகவும் சுலபமானது. குளிர்ந்த அல்லது சூடான பானங்களை இதன்மேல் வைப்பதற்கு வசதியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கங்கள்:

'பீர்' இருந்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம்

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

சுலபம்:

'பீர்' இருந்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம்

USB என்ற முறை மூலமாக சார்ஜ் செய்யவல்ல இந்த சாதனத்தின் திறனானது 1000mA அல்லது அதற்கு குறைவாகத்தான் இருக்குமாம்.

இந்த சாதனம் மூலமாக ஆன்ட்ராய்டு போன்கள், ஐபோன், ஐபாட் போன்றவைகளையும் சார்ஜ் செய்யமுடியும்.

கம்பெனி தரும் தகவல்:

'பீர்' இருந்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம்

எபிபானி நிறுவனம் கூறுகையில், இதை எடுத்துச்செல்வது சுலபமானது. சாதாரண சார்ஜர்கள் போலவே இதுவும் செயல்படும்.

சார்ஜ் செய்வதற்கு முன்னர், எப்பொழுதும் புதிய பானங்களையே பயன்படுத்தவேண்டும். இல்லையெனில், சார்ஜ் ஆகும் வேகமானது சற்று குறைவாகவே இருக்கும்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot