Home
Mobile

ரூ.31,200/- வரை ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் கருவிக்கு விலைக்குறைப்பு.!

இஎம்ஐ வசதியுடன் பிரபல ஆன்லைன் இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில்.!

By Muthuraj

ஆண்ட்ராய்டு சலித்து விட்டது ஒரு ஐபோன் வாங்க வேண்டும் ஆனால் பட்ஜெட் ரொம்ப இடிக்கிறது என்பது உங்கள் கவலை என்றால் உங்களின் கவலைக்குரல் பிரபல ஆன்லைன் இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு கேட்டு விட்டது போலும்.!

சமீபத்திய ஐபோன்களை வாங்க திட்டமிடுபவர்களுக்கு ப்ளிப்கார்ட் ஒரு மேம்படுத்தலான மற்றும் அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் கீழ் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு கருவிகளையும் கற்பனைக்கு எட்டாத வண்ணத்திலான விலைக்குறைப்பில் வாங்கலாம்.

ஐபோன் 7 32ஜிபி

ஐபோன் 7 32ஜிபி

இந்த 'மேம்படுத்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பயனர்கள் ஐபோன் 7 32ஜிபி மாறுபாட்டில் பிளாட் 5% தள்ளுபடி பெற்று ரூ.60,000/- என்ற விலையில் பெற முடியும்.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

கூடுதலாக பயனர்கள் ரூ.21,800/0 என்ற அளவிலான விலைக்குறைப்பை எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் நிகழ்த்த இக்கருவியை ரூ.35,200/- என்ற விலைக்கு பெறலாம். உடன் பிற ஐபோன் கருவிகளின் எக்ஸ்சேன்ஜ் மூலம் குறைந்த தள்ளுபடிகளையும் பெறலாம்.

ஐபோன் 7

ஐபோன் 7

இதேபோல், ஐபோன் 7 (128ஜிபி) மற்றும் ஐபோன் 7 (256ஜிபி) மாதிரிகளையும் சலுகைகளின் கீழ் முறையே ரூ.43,200/- மற்றும் ரூ.51,200/-க்கு வாங்கலாம். உடன் இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.70,000 மற்றும் ரூ.80,000/- விலை நிர்ணயம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்

மறுபக்கம் ஐபோன் 7 பிளஸ் மாதிரிகளின் 32 ஜிபி சேமிப்பு பதிப்பு 5% தள்ளுபடி மற்றும் பரிமாற்ற சலுகையின் கீழ் ரூ.44,800/- என்ற விலை நிர்ணயத்தில் நீங்கள் வாங்க முடியும். இக்கருவியின் நிஜமான விலை ரூ.72,000/- ஆகும். இதேபோல், இக்கருவியின் 128ஜிபி பதிப்பை ரூ.52,800/-க்கு வாங்க முடியும் (அசல் விலை ரூ.82,000/- ஆகும்)

256ஜிபி

256ஜிபி

ரூ 92,000/- செலவாகும் இக்கருவியின் 256ஜிபி மாறுபாட்டில் ரூ.26.600 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை கிடைக்கும். மற்றும் கைபேசியில் ஒரு 5% பிளாட் தள்ளுபடியும் உள்ளது, அதன் விளைவாக மொத்தம் ரூ.31,200/- சலுகை பெற்று ரூ.60,800/-க்கு இக்கருவி கிடைக்கும்.

கோல்ட் வெர்ஷன்

கோல்ட் வெர்ஷன்

ஐபோன் கோல்ட் வெர்ஷன் ஆன ஐபோன் 7 பிளஸ் 128ஜிபி, 32 ஜிபி மற்றும் ஐபோன் 7 128ஜிபி ஆகிய பதிப்புகள் இந்த மேம்படுத்தல் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்ட கருவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'மேம்படுத்தல்' திட்டம்

'மேம்படுத்தல்' திட்டம்

இது பிளாட் 5% தள்ளுபடி மட்டுமினிற் ரூ.25,100 வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகைகளையும் வழங்குகிறது. ஒருவொரு 'மேம்படுத்தல்' திட்டம் என்பதால், நீங்கள் உங்களின் பழைய ஐபோன் மாதிரிகளை தான் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் பயன்ப்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஐபோன் 4, 4எஸ், 5, 5எஸ், 5சி, 6, 6 பிளஸ், 6 எஸ் பிளஸ் மற்றும் எஸ்இ ஆகிய கருவிகள் மட்டுமே எக்ஸ்சேன்ஜ் சலுகைக்கு செல்லுபடியாகும்.

இஎம்ஐ வசதி

இஎம்ஐ வசதி

இந்த சலுகைக்கு ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் வங்கி, சிட்டி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி என பல்வேறு வங்கிகளில் இருந்து இஎம்ஐ வசதியும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

6ஜிபி ரேம், 41எம்பி கேம் - வாய்பிளக்க வைக்கும் நோக்கியா 9.!

Best Mobiles in India

English summary
Now buy iPhone 7, iPhone 7 Plus at a discount of up to Rs 31,200. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X