1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!

|

சுருக்கமாக இந்த 2022 நவம்பர் மாதத்தை "நல்ல ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான மாதம்" என்றே கூறலாம்.

ஏனென்றால் 1 அல்ல.. 2 அல்ல - இந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே மொத்தம் 9 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே டாப் மொபைல் போன் பிராண்டுகளிடம் இருந்து வருகின்றன.

அதென்ன Phone-கள்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு அறிமுகமாகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

01. நோக்கியா ஜி60 5ஜி

01. நோக்கியா ஜி60 5ஜி

ஆம்! நோக்கியா நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது நோக்கியா ஜி60 5ஜி மாடல் ஆகும்

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ஏஐ ரியர் கேமரா செட்டப், அதிவேக 5G கனெக்ஷன் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ரூ.25,490 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

02. ரியல்மி 10

02. ரியல்மி 10

ரியல்மி 10 ஆனது 4ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இது வருகிற நவம்பர் 9 ஆம் தேதி உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது MediaTek Helio G99 SoC-ஐ பேக் செய்யும் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது தோராயமாக ரூ. 15,650 - ரூ.17,300 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்!

03 & 04. ரியல்மி 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ பிளஸ்

03 & 04. ரியல்மி 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ பிளஸ்

ரியல்மி நிறுவனத்தின் மற்றொரு 10 சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆன Realme 10 Pro பற்றி போதுமான விவரங்கள் இல்லை.

ஆனால் Realme 10 Pro+ மாடல் ஆனது MediaTek Dimensity 1080 SoC, 12ஜிபி வரை ரேம், 512ஜிபி வரை ஸ்டோரேஜ், 6.7-இன்ச் அளவிலான 120Hz டிஸ்பிளே, 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,890 mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும் என்கிற லீக்ஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ரூ.25,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

05. ரெட்மி நோட் 12

05. ரெட்மி நோட் 12

இந்த நவம்பர் மாதம் ரெட்மியின் நோட் 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் ஆகின்றன. வெண்ணிலா மாடலான ரெட்மி நோட் 12 ஆனது 6.67 இன்ச் ஃபுல் எச்டி 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 48MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப், 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும்.

இதன் விலை நிர்ணயம் தோராயமாக ரூ.13,600 முதல் தொடங்கலாம். இதன் டாப்-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.19,300 க்கு விற்பனை செய்யப்படலாம்.

06. ரெட்மி நோட் 12 ப்ரோ

06. ரெட்மி நோட் 12 ப்ரோ

இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட், 50MP சோனி IMX766 OIS சென்சார் + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.19,300 முதல் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!

07. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

07. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

இது 6.67-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 1080 SoC சிப்செட், 200MP மெயின் OIS சென்சார் + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

இது ரூ.25,000 - ரூ.30,000 ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08. ஒன்பிளஸ் நோர்ட் என்300

08. ஒன்பிளஸ் நோர்ட் என்300

ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் அதன் நோர்ட் சீரீஸின் கீழ் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது OnePlus Nord N300 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் 48எம்பி கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரேட் உடனான HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் Dimensity 810 ப்ராசஸர் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

இது ரூ.20,000 என்கிற பட்ஜெட்டை சுற்றிய விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!

09. இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

09. இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இந்த நவம்பர் 2022-இல் இன்பினிக்ஸ் நிறுவனமும் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்கிறது. அது Infinix Zero Ultra 5G ஆகும்.

இது 200எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 180W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை பேக் செய்யலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.42,490 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
2022 november could be best time to buy good phones because 9 new smartphones are launching

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X