நவீன தொழில்நுட்பத்துடன் புதிய சோனி எரிக்ஸன் மொபைல்!

Posted By: Staff
நவீன தொழில்நுட்பத்துடன் புதிய சோனி எரிக்ஸன் மொபைல்!

சோனி எரிக்சன் தனது மொபைல் தொழில் நுட்ப வலிமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. ஆனால் இன்னும் புதுமைகளை புகுத்திய வண்ணம் இருக்கிறது. வரும் ஆண்டில் சோனி எரிக்சனின் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சந்தோஷம் அளிக்கும் செய்தி காத்திருக்கிறது.

ஆம்! புதுமையை விரும்பும் மக்களுக்கு சிறந்த தொழில் நுட்பத்தை கொடுக்கும் வகையில் புதிய மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. எல்டி-22-ஐ என்ற பெயரில் வரும் இந்த மொபைல் சோனி எரிக்சன் நிப்பான் என்ற பெயரையும் கொண்டுள்ளது.

இந்த மொபைல் பற்றிய தகவல்களின் படி இந்த எல்டி-22-ஐ மொபைலில் டியூவல் கோர் எஸ்டி-எரிக்சன் நோவாதோர் யூ8500 சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இதனால் அதி வேகத்தினையும் உயர்ந்த தொழில் நுட்பத்தினையும் பெற முடியும்.

இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருக்கும். இதில் உள்ள நவீன தொழில்நுட்பம் கொண்டச சிப்செட் பிராசஸர், இதன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்வெச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க பெரிதும் துணை புரியும்.

இந்த மொபைல் பற்றி வேறெந்த அதிகார பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. எல்டி-22-ஐ மொபைலின் முக்கிய தகவல்கள் இன்னும் ரகசியமாகவே இருக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்