ஒரே நாளில் 1 லட்சம் யூனிட்கள் காலி.. Nothing Phone 2a விற்பனையை கெடுக்கும் புதிய Infinix போன்! என்ன மாடல்?
நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ மாடலின் இந்திய விற்பனை தாறுமாறாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் நாளிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தான்!
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 - ரூ.40,000 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் இது ரூ.23,999 க்கு அறிமுகமானது. சற்றே வித்தியாசமான டிசைனை கொண்ட ஸ்மார்ட்போனை தேடும் மொத்த இந்தியர்களின் கண்களும் தற்போது நத்திங் போன் 2ஏ மீதுதான் உள்ளது!

அதை "கெடுக்கும்" நோக்கத்தின் கீழ்.. மற்றும் இந்தியர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வேலையொன்றை இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் பார்த்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் நத்திங் போன் 2ஏ மாடலுக்கு எதிராக ஒரு புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையை கெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ மாடல் தான். நத்திங் போன்களின் பேக் பேனல்களில் காணப்படுவது போலவே இதிலும் கிளிஃப் இன்டர்ஃபேஸ் (Glyph Interface) போன்ற டிசைனை காணமுடிகிறது.

எப்போது அறிமுகமாகும்? இந்தியாவில் இது எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இது பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தை (Bureau of Indian Standards) கடந்துவிட்டது. பொதுவாக பிஐஎஸ்-ல் காணப்பட்ட ஸ்மார்ட்போன்கள் உடனடி வெளியீட்டை காணும். அதையே நாம் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ மாடலிலும் எதிர்பார்க்கலாம்.
என்ன விலைக்கு வரும்? விலையை பொறுத்தவரை இது ரூ.25,999 - ரூ.29,999 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் (இதற்கு முன்பாக வெளியான) இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) மாடலானது தற்போது ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) மூலம் இயக்கப்படலாம். இது 12ஜிபி வரையிலான ரேம்-ஐ பேக் செய்யும். கூடவே 8ஜிபி ரேம் ஆப்ஷனும் இருக்கும்; இரண்டுமே 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அனுப்பப்படலாம்.
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற மார்ச் 18 ஆம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆன சீட்டா எக்ஸ்1 (Cheetah X1) மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் (எந்த இன்பினிக்ஸ் போனிலும் இல்லாத அளவிற்கு) 100W பாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டிருக்கும்!
நத்திங் போன் 2ஏ விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே, 32எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








