Home
Mobile

மார்ச் 4 உறுதி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. வருகிறது புதிய Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் (Nothing) நிறுவனம் ஒருவழியாக புதிய போன் அறிமுகம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி பவர் இன் பெர்ஸ்பெக்டிவ் (Power in Perspective) நிகழ்வு நடைபெற உள்ளதாகத் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய போன் வெளியிடப்படும் என்று தற்போது டீசர் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்த பவர் இன் பெர்ஸ்பெக்டிவ் நிகழ்வில் நத்திங் போன் 3 (Nothing Phone 3) அல்லது நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நத்திங் நிறுவனம் மார்ச் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ள போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஏற்கனவே நத்திங் போன் 3 மாடலின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மார்ச் 4 உறுதி.. வருகிறது புதிய Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் போன் 3 அம்சங்கள் (Nothing Phone 3 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் உடன் நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

Nothing OS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த நத்திங் போன் 3 போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இசிம் ஆதரவு, 12ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் நத்திங் போன் 3 வெளிவரும். தற்போது இந்த போனின் சில தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 2 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த நத்திங் போன் 2 மாடல். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.39,999 விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.

டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

மார்ச் 4 உறுதி.. வருகிறது புதிய Nothing போன்.. எந்த மாடல்?

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வருகிறது நத்திங் போன் 2. மேலும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing to launch new smartphone on March 4: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X