Home
Mobile

ப்ரோ தன்னை Apple இல்லை என்பதை உணர்ந்தார்.. 2025 ஆரம்பமே 3 புதிய Nothing போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

கார்ல் பெய் (Carl pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனத்தின் மீது பலவகையான கருத்துக்கள் உண்டு. இந்நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 1 (Nothing Phone 1) மாடலை, கடந்த 2022 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்து இருந்தாலும் கூட, தற்போது வரையிலாக இந்நிறுவனத்தின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக நத்திங் நிறுவனத்தின் கீழ் நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) அறிமுகமானது. அதற்கு முன்னர் நத்திங் போன் 2 (Nothing Phone 2) மற்றும் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடல்கள் அறிமுகமாகி இருந்தன.

2025 ஆரம்பமே 3 புதிய Nothing போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

அதாவது இந்நிறுவனம் ஆப்பிள் (Apple) நிறுவனத்தை போல ஆண்டுக்கு 1 முறை மட்டுமே புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. "அடேய் ஆப்பிள் கூட ஒரே நேரத்துல 4 மாடல்களை அறிமுகம் செய்யுமே!" என்கிற வசைகளுக்கு நடுவில் தான் நத்திங் நிறுவனம் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தது.

"இது வேலைக்கு ஆகாது ப்ரோ!" என்று யாரேனும் கார்ல் பெய்யிடம் கூறி இருப்பார்கள் போல, 2025 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனம் மொத்தம் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. பிரபலமான பெஞ்மார்க்கிங் இணையதளத்தில் (Benchmark Website) ஒரு புதிய நத்திங் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது.

இது நத்திங் போன் 2 மாடலுக்கு அடுத்தபடியாக வரும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு சேர்த்து நத்திங் போன் 3 மாடலின் ப்ரோ அல்லது பிளஸ் மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நத்திங் போன் 3 ப்ரோ (Nothing Phone 3 Pro) அல்லது நத்திங் போன் 3 பிளஸ் (Nothing Phone 3 Plus) அறிமுகம் செய்யப்படலாம்.

மூன்றாவதாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) அறிமுகம் செய்யப்படலாம். டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (@heyitsyogesh) கூற்றுப்படி, யுகே-வை தளமாக கொண்ட நத்திங் நிறுவனம் தற்போது இந்த மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்து வருகிறது. இந்த மூன்று மாடல்களுமே 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 3 மற்றும் நத்திங் போன் 3 ப்ரோ (அ) பிளஸ் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 SoC), அட்ரெனோ 810 ஜிபியு (Adreno 810 GPU), ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 8ஜிபி ரேம் (8GB RAM), 6.5 இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம்.

இதற்கு முன்னதாக வந்த லீக்ஸ் தகவல்கள், இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3 SoC) அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட்டுடன் வரலாம் என்று பரிந்துரைக்கின்றன. அடுத்ததாக உள்ள நத்திங் போன் 3 ப்ரோ அல்லது பிளஸ் மாடலை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 Chipset) மற்றும் 6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

விலை விவரங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் $599 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.50,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ப்ரோ அல்லது பிளஸ் வேரியண்ட் ஆனது சுமார் $699 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.58,900 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing to Launch 3 New Smartphones Phone 3 Phone 3 Pro or Phone 3 Plus Phone 3a in 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X