கலக்குற கார்ல் பெய்.. ஆளுக்கு 2 ஆர்டர் போடும் விலையில் CMF Phone 1.. 120Hz டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5G வேற!
கடந்த சில நாட்களாகவே "விரைவில் அறிமுகம்" என்று டீஸ் செய்யப்பட்டு வந்த சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எஃப் அதன் முதல் ஸ்மார்ட்போனிற்கு சிஎம்எஃப் போன் 1 என்று பெயர் வைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் நத்திங் நிறுவனத்தின் பாணியை பட்ஜெட்-விலையில் பின்பற்றுவதையே இது நோக்கமாக கொண்டுள்ளது. ஆக சிஎம்எஃப் போன் 1-ன் விலை நிர்ணயமும் பட்ஜெட்டில் இருக்குமா? இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
சிஎம்எஃப் போன் 1 எப்போது அறிமுகமாகும்? கார்ல் பெய் தலைமையிலான சிஎம்எஃப் நிறுவனத்தின் அடுத்த கம்யூனிட்டி அப்டேட் ஈவென்ட் (Community Update event) ஆனது ஜூலை 8 ஆம் தேதி நடக்கும் என்றும், அந்நிகழ்வில் சிஎம்எஃப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எஃப் போன் 1 அறிமுகமாகும் என்றும், கூடவே அடுத்த சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளம் வழியாக பகிரப்பட்ட போஸ்டின்படி, சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) மற்றும் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) உடன் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஆனது ஜூலை 8 ஆம் தேதி இந்திய நேரடிப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும் கம்யூனிட்டி அப்டேட் ஈவென்ட்டில் அறிமுகம் செய்யப்படும்.
சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிஎம்எஃப் போன் 1 குறித்த டீசர்களில் ஒன்று, இதில் ஸ்மார்ட் டயல் (Smart Dial) என்று அழைக்கப்படும் ஒரு டயல்-ஐ காணமுடிகிறது. இது மீடியா பிளேபேக் மற்றும் சவுண்டை கண்ட்ரோல் செய்ய பயன்படுத்தப்படலாம். அத்தவாயு பழைய ரேடியோவில் உள்ள வால்யூம் அல்லது சவுண்ட் கண்ட்ரோலர்-ஐ போல இது செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, முன்னதாக அறிமுகமான நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே, இது 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 உடன் அனுப்பப்படலாம்.

சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிரார் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, சிஎம்எஃப் போன் 1-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி ஆனது ரூ.19,999 ஆக இருக்கும்.
ஆக இந்திய சந்தையில் இது ரூ.17.999 முதல் ரூ.18,999 க்குள் என்கிற விலை குறிக்குள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டை நிர்ணயம் செய்துகொண்டால் ஜூலை 8 அன்று நடக்கும் அறிமுகத்தின் போது ஏமாற்றம் எதுவும் இருக்காது.
இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வருவதால், முந்தைய நத்திங் போன்களில் நாம் கடன் முக்கிய அம்சமான க்ளிஃப் லைட்டிங் (Glyph Lighting) டிசைன் ஆனது சிஎம்எஃப் போன் 1-ல் இடம்பெறாமல் போக 99% வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக சிஎம்எஃப் சீரிஸின் கீழ் வரும் இந்த முதல் ஸ்மார்ட்போன் ஆனது நத்திங் போன்களை விட மிகவும் வேறுபட்டதாகவும் மற்றும் பட்ஜெட்-விலையில்.. மிகவும் சிம்பிள் ஆகவும் இருக்கும்!


Click it and Unblock the Notifications








