Home
Mobile

சிறுபிள்ளை தனமாக Nothing செய்த காரியம்.. 2 Pokemon கதாபாத்திரங்களை ஷேர் செய்தது ஏன்?

நத்திங் (Nothing) நிறுவனம் தனது வழக்கமான பாணியில், வரவிருக்கும் புதிய நத்திங் தயாரிப்புகளை பற்றி சூசகமாக தெரிவிக்க போக்கிமான்களை (Pokemon) பயன்படுத்தி, புதிய டீசர்களை வெளியிட்டு உள்ளது. அதென்ன போக்கிமான்கள்? இவைகள் எந்த தயாரிப்பின் அறிமுகத்தை டீஸ் செய்கிறது? இதோ விவரங்கள்:

நத்திங் நிறுவனம், பிளாஸ்டாய்ஸ் (Blastoise) மற்றும் ஜம்ப்ளஃப் (Jumpluff) ஆகிய போக்கிமான்களின் படங்களை தனது தனித்துவமான டாட்-மேட்ரிக்ஸ் பாணியில் பகிர்ந்துள்ளது. இது குறைந்தபட்சம் இரண்டு புதிய டிவைஸ்கள் வரவிருப்பதை உணர்த்துகிறது. வரவிருக்கும் புதிய தயாரிப்புகளுக்கான நிறுவனத்தின் இன்டர்னல் கோட் நேம்கள் தான் இந்த போக்கிமான் கதாபாத்திரங்கள் ஆகும்.

Nothing: 2 Pokemon கதாபாத்திரங்களை ஷேர் செய்தது ஏன்?

இந்த டீசர்கள் எந்த தயாரிப்பின் அறிமுகத்தை குறிப்பிடுகின்றன என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை, இருந்தாலும் மார்க்கெட் யூகங்களின்படி ஒரு புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம், சுவாரஸ்யமாக, நத்திங் இந்தியாவும் பிளாஸ்டாய்ஸ் டீசரை பகிர்ந்துள்ளது, இது வரவிருக்கும் புதிய நத்திங் தயாரிப்புகளில் குறைந்தபட்சம் ஒன்று இங்கே அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் குறிக்கிறது.

புதிய நத்திங்/சிஎம்எஃப் போன்: பிளாஸ்டாய்ஸ் டீசர், நத்திங் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக யூகங்களை தூண்டியுள்ளது. இந்த போக்கிமான் அதன் சக்தி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது, எனவே நத்திங் நிறுவனம் செயல்திறனை மையமாக கொண்ட ஒரு போனை அறிமுகப்படுத்தத் திட்டமிடலாம்.

இது சிஎம்எஃப் போன் 2 ப்ரோவின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாக இருக்கலாம். அதாவது சிஎம்எஃப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான லீக்களும் வெளிவந்துள்ளன. இது மேம்படுத்தப்பட்ட பொருட்கள், ஒரு உலோக கட்டமைப்பு, நத்திங் போன் சீரீஸால் ஈர்க்கப்பட்ட மறுவடிவமைக்கப்பட்ட கேமரா மாட்யூல் மற்றும் ஒரு குவால்காம் சிப்செட் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

இது 45W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 5,500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு டிப்ஸ்டர் முன்னதாகக் கூறியிருந்தார். மற்றொரு கோட்பாடும் உள்ளது. பிளாஸ்டாய்ஸ் டீசரை சிஎம்எஃப் பை நத்திங் என்பதற்கு பதிலாக நத்திங் இந்தியா வெளியிட்டதால், இது ஒரு சிஎம்எஃப் ஸ்மார்ட்போனிற்கு பதிலாக முற்றிலும் வேறுபட்ட நத்திங் பிராண்டட் ஸ்மார்ட்போனை குறிக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதிய நத்திங் இயர் 3ஏ மாடல்: ஜம்ப்ளஃப் டீசர் ஒரு ஆடியோ தயாரிப்புடன் தொடர்புடையதாகவே தெரிகிறது. சமீபத்திய லீக்கள், நத்திங் இயர் ஏ சீரீஸின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலான நத்திங் இயர் 3ஏ மாடலின் வெளியீட்டை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த இயர்பட்ஸ்களில் 11 மிமீ டைனமிக் டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ, LDAC ஆதரவு மற்றும் கஸ்டம் EQ கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நத்திங்கின் தயாரிப்புகளை தனித்து நிற்க செய்த அதன் டிரான்ஸ்பரென்ட் டிசைன் லேங்குவேஜும் இவை தக்கவைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் மாடலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.10,700ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஒட்டுமொத்தமாக - நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் புதிய வெளியீடுகளை தயாரித்து வருவதாக தெரிகிறது. தனித்துவமான வடிவமைப்பையும், போட்டித்தன்மை வாய்ந்த விலையையும் இணைப்பதில் இந்நிறுவனம் சமீப காலமாகத்தான் நற்பெயரை உருவாக்கியுள்ளது. எனவே, வரும் மாதங்களில் நீங்கள் ஒரு புதிய போன் அல்லது இயர்பட்ஸ் வாங்க நினைத்தால், நத்திங் நிறுவனத்திடம் இருந்து வரும் அறிவிப்புகளை கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Nothing Pokemon Blastoise and Jumpluff Teased New Products Possibly new Phone and Earbuds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X