இதுக்குத்தான தவம் கிடந்தோம்.. 5400mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது Nothing போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. மேலும், ரேம் மற்றும் மெமரி விவரங்களும் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. பட்ஜெட் விவரங்களும் கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது.
வருகிற ஜூலை 7ஆம் தேதியன்று இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, அந்த தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, நத்திங் போன் 4பி மாடலின் டிசைன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் ப்ளூ கலர், டூயல் கேமரா உறுதியாகி இருக்கிறது.

வேறு எந்த பீச்சர்களும் உறுதியாகவில்லை. ஆனால், டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) அவரது எக்ஸ் தளத்தில் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதேபோல கலர் மற்றும் மெமரி ஆப்ஷன்களையும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன.
நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4) சிப்செட்டை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்க இருக்கிறது. 3 கலர் வேரியண்ட்கள் வருகின்றன.
பிளிப்கார்ட் தளத்தில் வழியாக ப்ளூ கலர் வேரியண்ட் கிடைப்பது தெரியும். ஆகவே, ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) அல்லது பிங்க் (Pink) கலர்களில் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானது கிடையாது.
டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது மட்டுமேயாகும். இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) இந்த நத்திங் போன் 4பி மாடலில் எதிர்பார்க்கலாம்.
வழக்கம்போல இந்த நத்திங் போனிலும் கிஃளைப் இன்டர்பேஸ் வருகிகிறது. ஆனால், இந்த முறை கிஃளைப் பார் (Glyph Bar) கிடைக்கிறது. அதாவது, கேமராவுக்கு அருகில் 5 எல்இடிகளுடன் கிஃளைப் பார் இடம்பெற்றுள்ளது. டூயல் கேமரா வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா வழக்கம்போல கிடைக்கலாம். ஆனால், செகண்டரி கேமராவில் 2 ஆப்ஷன்கள் உள்ளன.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா அல்லது 2 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கலாம். நத்திங் நிறுவனத்தில் ஏ சீரிஸ் மாடல்கள் வரிசையாக வெளியாகிவந்தன. ஆனால், பி சிரீஸ் மாடல்கள் வெளியாகமல் இருந்தது. இப்போது, முதல்முறையாக பி சீரிஸ் மாடல்களில் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
இதற்கு ஏற்ப டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் 3ஏ மாடலின் டிசைனில் இருந்து இது வேறுபடுகிறது. அரிசோன்டல் கேமரா அமைப்பில் இருந்து நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெர்டிகலுக்கு மாறி இருக்கிறது. இருப்பினும், கிஃளைப் இன்டர்பேஸ் கிட்டத்த ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications