இப்படிவொரு போன கனவுல நினைக்கல.. DUAL கேமரா.. 5 LED கிளைஃப் பார்.. புது Nothing ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
நத்திங் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான டிசைனில் நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. டிசைன் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. புதிதாக 6 எல்இடி கிளைஃப் பார் கொடுத்துள்ளது.
இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய மார்கெட்டில் பிளிப்கார்ட் (Flpikart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, டிசைன் மற்றும் கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சீரிஸ் மாடலில் ப்ளூ கலர் (Blue Colour) கிடைக்க இருக்கிறது.

பேக் பேனலில் கிளைஃப் பார் (Glyph Bar) கிடைக்கிறது. இதில் 5 எல்இடி லைட்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. 4 லைட்டுகள் ஒயிட் மற்றும் 5ஆவது லைட் ரெட் கலரில் இருக்கிறது. வழக்கம்போல டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) கொண்ட மாடலாக இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் இருக்கிறது. வெர்டிகல் லைனில் கேமரா பம்ப் இருக்கிறது.
கேமராவை சுற்றி மெட்டாலிக் லைன் இருக்கிறது. இந்த டிசைன் விவரங்கள் மற்றும் கலர் விவரம் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், சிப்செட், ஓஎஸ், கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரேம் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதேபோல பட்ஜெட்டும் மார்கெட்டில் கசிந்துள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பது தெரிகிறது.
நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Qualcomm Snapdragon 6 Gen 4) சிப்செட்டுடன் இந்த நத்திங் போன் 4பி வெளியாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது.
8 ஜிபி ரேம் கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. நத்திங் நிறுவனம் உறுதி செய்யவில்லை. அதேபோல இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30,000 மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மாடலின் விலை ரூ.37,999 ஆக இருக்கிறது. இதைவிட கொஞ்சம் மலிவாக கிடைக்கலாம்.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. அட்ரினோ 810 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கிடைக்கிறது. 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் உள்ளது.
4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சாம்சங் ஜிஎன்9 சென்சார் மற்றும் அல்ட்ரா வைடு கேமராவில் ஐஎம்எக்ஸ்355 சென்சார் கிடைக்கிறது.
மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, சாம்சங் ஜேஎன்5 சென்சார் மற்றும் 7x லால்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. 70x அல்ட்ரா ஜூமிங் கிடைக்கிறது. ஆக்சன் மோட் உள்ளது. 32 எம்பி செல்பீ உள்ளது. 50W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications