முரட்டு ஆஃபர்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
நத்திங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த நத்திங் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 36 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ..34,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,625 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,374 விலைக்கு இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): 6.77 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) அமோலட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஏஜிசி டிடி-ஸ்டார் 2 (AGC DT Star 2) புரொடெக்சன் கொடுத்துள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட்டை இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கிடைக்கிறது. சாம்சங் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ட்ரூலென்ஸ் என்ஜின் 4.0 (TrueLens Engine 4.0) உள்ளது.
மேலும், அல்ட்ரா எச்டிஆர் (Ultra XDR) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த நத்திங் போன் 4பி கொண்டுள்ளது. இதிலும் சாம்சங் (Samsung) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்துள்ளது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்டை (Dust & Splash Resistant) இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
நத்திங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் பிரத்யேக டிசைன் இந்த நத்திங் போன் 4பி மாடலிலும் கிடைக்கிறது. 4400 எம்எம் வேப்பர் சேம்பர் கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜியும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற டிசைன் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications