நாளை களமிறங்கும் புது நத்திங் 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
நத்திங் நிறுவனம் கடந்த வாரம் புதிய நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போன் நாளை (ஜூலை 14) முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 4பி மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ38,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.

நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): நத்திங் போன் 4பி போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2344 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட் உடன் இந்த நத்திங் போன் 4பி போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
குறிப்பாக Nothing OS 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) வசதிகளும் நத்திங் போன் 4பி போனில் உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் இந்த புதிய நத்திங் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் நத்திங் போன் 4பி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 4பி போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 6.0, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. பிளாக், ஒயிட் மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications