Home
Mobile

அடிச்சு தூக்கும் ஆபர் விலையில் புது Nothing 5ஜி போன்.. 50MP OIS EIS கேமரா, 6000mAh பேட்டரி, IP64.. எந்த மாடல்?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகவும், நத்திங்கின் முதல் 'பி' சீரிஸ் ஸ்மார்ட்போனாகவும் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) மாடலின் இந்திய விற்பனை, இன்று (ஜூலை 14) தொடங்கியது. என்ன விலை? என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

நத்திங் போன் 4பி விலை மற்றும் சலுகைகள்: இந்தியாவில் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அடிச்சு தூக்கும் ஆபர் விலையில் புது Nothing 5ஜி போன்!

சலுகைகளை பொறுத்தவரை, நத்திங் நிறுவனம் 7.5 சதவீத உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (பழைய போனை மாற்றிக்கொள்ளும் சலுகை) ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் க்ரோமா (Croma), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), விஜய் சேல்ஸ் (Vijay Sales) வழியாக வாங்க கிடைக்கிறது. இதை பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் கலர்களில் வாங்கலாம்.

நத்திங் போன் 4பி அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- Android 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Nothing OS 4.1 ஓஎஸ்
- மூன்று ஆண்டுகளுக்கான OS அப்டேட்ஸ்
- ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- 6.77-இன்ச் Full-HD+ (1,080 x 2,344 பிக்சல்ஸ்) Samsung Super AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)

- 1,000Hzஇன்ஸ்டன்ட் சாம்ப்ளிங் ரேட் (instant sampling rate)
- 480Hz PWM டிம்மிங்
- 2,000 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 16.7 மில்லியன் கலர்ஸ்
- AGC DT-Star 2 பாதுகாப்பு
- IP64 ரேட்டிங்
- Qualcomm-இன் 4nm ஆக்டா-கோர் Snapdragon 6 Gen 4 சிப்செட்

- Adreno 810 GPU, Qualcomm Hexagon NPU, Qualcomm AI Engine மற்றும் Qualcomm Spectra Image Signal ப்ராசஸர்
- 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ்
- 4400 சதுர மிமீ வெப்ப வெளியேற்ற பரப்பளவைக் கொண்ட 'வேப்பர் சேம்பர்' (vapour chamber) கூலிங் சிஸ்டம்

- பேக் பேனலில் 45 மினி-எல்இடி (mini-LED) லைட்களை கொண்ட 'கிளிஃப் பார்' (Glyph Bar) இன்டர்பேஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா (1/2.76-அங்குல சாம்சங் சென்சார், 74.2-டிகிரி பார்வைக் கோணம் (field of view), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) மற்றும் ஆட்டோஃபோகஸ்)

- 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் 1/4-இன்ச் சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 1/3-இன்ச் சாம்சங் சென்சார் மற்றும் 81.8-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 16 மெகாபிக்சல் (f/2.4) செல்ஃபி கேமரா
- 4K/30 fps வரையிலான தரத்தில் வீடியோவை பதிவு செய்யும் திறன்

- 6,000mAh பேட்டரி
- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக சுமார் 80 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்
- 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 6.0, USB Type-C போர்ட், GPS, GLONASS, BDS, Galileo மற்றும் QZSS

- ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ஈ-காம்பஸ், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் பாதுகாப்பிற்கான இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164.4x78.2x8.6 மிமீ
- எடையில் சுமார் 210 கிராம்

Best Mobiles in India

English summary
Nothing Phone 4b Sale Started in India Check Out Original Price Offers Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X