Home
Mobile

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. Nothing-ன் RCB போன்.. 5400mAh பேட்டரி, 50MP கேமரா, 5ஜி உடன் புது மாடல்!

மெமரி பற்றாக்குறை காரணமாக - ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையும் விலை உயர்வில் தத்தளித்து கொண்டிருக்கிறது. சில நிறுவனங்கள் ரூ.10,000 வரை விலை உயர்வை அறிவித்துள்ளன. இதில் நம்ம அண்ணன் கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமும் அடங்கும்!

இதற்கிடையில் தான் பட்ஜெட் விலையில் நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்வதாக நத்திங் அறிவித்து இருந்தது. இது ஜூலை 7 ஆம் தேதி அன்று மதியம் 3.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. Nothing-ன் RCB போன்!

தற்போது அதே ஜூலை 7 ஆம் தேதி அன்று, நத்திங் நிறுவனமானது ஒரு ஸ்பெஷல் எடிஷனையும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது நத்திங் போன் 4பி ஆர்சிபி எடிஷன் (Nothing Phone 4b RCB Edition) ஆகும், இன்ஸ்டாகிராமில், இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோவானது இந்த ஸ்மார்ட்போனின் இருப்பை உறுதி செய்கிறது. மேலும் இதுவும் ஜூலை 7 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா: நத்திங் போன் 4பி ஒரு என்ட்ரி லெவல் நத்திங் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நத்திங்கின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலோட்டமாக கேட்டால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் நத்திங் போன் 4ஏ சீரீஸ் மீது அறிவிக்கப்பட்ட சமீபத்திய விலை உயர்வு ஆனது, "என்ட்ரி லெவல் விலை" என்றால் எவ்வளவு என்கிற கேள்வியை எழுப்புகிறது. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனத்திடமும் கூட என்ட்ரி லெவல் ஐபோன் இருக்கிறது (ஐபோன் 17இ - ரூ.64,900). ஆனால் அது ஆப்பிளுக்கு மட்டுமே என்ட்ரி லெவல் ஆக இருக்கும்; மற்றவர்களுக்கு இருக்காது. இதே டெக்னீக் - நத்திங்கின் போன் 4பி மாடலிலும் இருக்கலாம்.

இப்போதைக்கு நத்திங் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான மற்றும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் நத்திங் போன் 4ஏ சீரீஸ் தான். சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 இல் இருந்து ரூ.37,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.39,999 ஆக உயர்ந்து உள்ளது.

நிலைமை இப்படி இருக்கும் போது, இதற்கு கீழே வரும் அடுத்த என்ட்ரி லெவல் (நத்திங் போன் 4பி) ஸ்மார்ட்போனின் விலை எப்படி அனைவரும் வாங்கும்படியான நிர்ணயத்தில் இருக்க முடியும் என்பதே இங்கு எழும் முக்கிய கேள்வி. பெரும்பாலும் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வரும்.

ஆக இதுவும் நத்திங் போன் 3 மாடலை போலவே அதிக விலை நிர்ணயத்தின் காரணமாக பல்பு வாங்க சான்ஸ் உள்ளது. அதை முன்கூட்டியே சரி செய்யத்தான் ஆர்சிபி ரசிகர்களை சுண்டி இழுக்க - நத்திங் போன் 4பி ஆர்சிபி எடிஷன் வருகிறது. இதுதான் நத்திங் நிறுவனத்தின் "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" மொமெண்ட் ஆகும்!

நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் ரியர் கேமரா
- 5400mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Nothing Phone 4b RCB Edition Expected to Launch Alongside Standard Phone 4b on July 1 Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X