Home
Mobile

நத்திங் களமிறக்கும் புது 5ஜி போன்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

நத்திங் நிறுவனம் தனது புதிய நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய நத்திங் போன் வெளியாகும். இப்போது ஆன்லைனில வெளியான இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நத்திங் களமிறக்கும் புது 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் (Snapdragon 6 Gen 4 chipset) உடன் புதிய நத்திங் போன் 4பி போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நத்திங் போனிலும் கிஃளைப் இன்டர்பேஸ் வருகிறது. ஆனால் இந்த முறை கிஃளைப் பார் (Glyph Bar) கிடைக்கிறது. அதாவது, கேமராவுக்கு அருகில் 5 எல்இடிகளுடன் கிஃளைப் பார் இடம்பெற்றுள்ளது. இது ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போன் அறிமுகமாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் களமிறக்கும் புது 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

5400எம்ஏஎச் பேட்டரி உடன் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.30,000-க்கு கீழ் புதிய நத்திங் போன் 4பி போன் வெளியாகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Nothing Phone 4b price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X