புது போன் அடுத்த மாசம் வாங்கிக்கலாம்.. ரூ.5000 கம்மி விலை.. Nothing Phone 4b அறிமுக தேதி அறிவிப்பு!
நத்திங் (Nothing) நிறுவனமானது தனது புதிய 'பி' சீரிஸ் ஸ்மார்ட்போனை டீஸ் செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே, அது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதியை உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் தனது புதிய 'என்ட்ரி-லெவல்' (entry-level) ஸ்மார்ட்போனான நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) மாடலை இந்தியாவில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி அன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளது
நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனில் பில்-ஷேப்ட்டு (pill-shaped) ரியர் கேமரா யூனிட் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவை இடம்பெறும் என்பதை நத்திங் நிறுவனம் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. மேலும் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மாடலில் காணப்பட்டதை போலவே, நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கிடைமட்டமான கிளிஃப் பார் (Glyph Bar) இன்டர்பேஸும் இடம்பெறக்கூடும்.

அறிமுகமான பின்னர் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் ஆனது ஃபிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் நோவா கேட் (@Cartidise) வழியாக கிடைத்துள்ளதகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் குறைந்தது இரண்டு விதமான ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் (storage) ஆப்ஷன்களில் வெளியாகும்.
விலையை பொறுத்தவரை ஹைஎண்ட் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் விலையை விட நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனின் ரூ.3,000 முதல் ரூ. 5,000 வரை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன், இந்தியாவில் கடந்த மார்ச் 5 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 31,999 க்கு அறிமுகமானது.
நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 30Hz முதல் 120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் - கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- LPDDR4X ரேம் - UFS 3.1 ஸ்டோரேஜ்
- 5,400mAh பேட்டரி
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP64 ரேட்டிங்
- 2 ஹை டிபெனிஷன் மைக்குகள்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் - இன்டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் எசன்ஷியல் கீ உள்ளது; இது Essential Voice எனப்படும் புதிய AI அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
- புதிய Glyph Bar உடன் வருகிறது; ஆறு LEDகள் மற்றும் 63 மினி-LEDகளை பேக் செய்கிறது
நத்திங் போன் 4ஏ உடன் சேர்ந்து அறிமுகமான நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- செமி டிரான்ஸ்பரென்ட் டிசைன்
- பேக் பேனலில் கிளிஃப் மேட்ரிக்ஸ் டிசைன் (விசித்திரமாக மேலே ஒரு சென்சார் மற்றும் கீழே மற்ற இரண்டு சென்சார்கள் உள்ளன)
- மெட்டல் பாடி - 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.83-இன்ச் 1.5K பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 32MP செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,400mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்


Click it and Unblock the Notifications