Home
Mobile

அந்தர் பல்டி அடிச்ச Nothing.. CMF Phone-ஐ கழட்டி விட்ட கையோடு புது (b) போன் அறிவிப்பு!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் வழக்கமான பாணியில், மற்றொரு புதிரான டீசரை வெளியிட்டுள்ளது. உதிரிபாகங்களின் விலை உயர்வு காரணமாக 2026 இல் புதிய சிஎம்எப் (CMF) ஸ்மார்ட்போனை வெளியிட போவதில்லை என்பதை உறுதிப்படுத்திய சில மணிநேரங்களுக்கு பிறகு, நத்திங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்ட் ஆனது "(b)" என்கிற எழுத்தை பதிவிட்டுள்ளது. இது நத்திங் ஸ்மார்ட்போன் சீரீஸில் புதிதாக ஏதோ ஒன்று வரப்போவதற்கான குறிப்பு என்று ரசிகர்கள் ஏற்கனவே ஊகிக்க தொடங்கிவிட்டனர்.

விண்ணை முட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலைகள் காரணமாக, விலையை உயர்த்தாமலோ அல்லது தரத்தில் சமரசம் செய்யாமலோ சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடலுக்கான ஒரு அப்கிரேட் வெர்ஷனை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும், பட்ஜெட்டில் கவனம் செலுத்தும் அந்த பிராண்ட் அதை செய்ய விரும்பவில்லை என்றும் இணை நிறுவனர் அகிஸ் எவாஞ்சலிடிஸ் வெளிப்படையாக விளக்கியதை தொடர்ந்து இந்த டீசர் வந்துள்ளது.

CMF Phone-ஐ கழட்டி விட்ட கையோடு புது (b) போன் அறிவிப்பு!

அமைதியாக இருப்பதற்கு பதிலாக, நத்திங் இந்த டீசர் மூலம் உடனடியாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. இந்த டீசர், ஒரு சாத்தியமான நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) பற்றிய ஊகங்களை தூண்டியுள்ளது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro ) ஆகிய மாடல்களுடன் இணைந்து, நத்திங்கின் மிட்ரேன்ஜ் சீரிஸில் உள்ள ஒரு இடைவெளியை நிரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமாக, நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு ஒரு முழுமையான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவில்லை, அதாவது நத்திங் போன் 4 (Nothing Phone 4) மாடலை வெளியிடவில்லை. நத்திங் போனே 3 (Nothing Phone 3) மாடலையே தற்போதைய ஹை-ரேன்ஜ் மாடலாக வைத்துக்கொண்டு, எளிதில் அணுகக்கூடிய "ஏ" சீரீஸில் செலுத்துகிறது. ஒரு "பி" வகை ஆனது இந்த பிராண்டிற்கு ஒரு புதிய களமாக இருக்கும்.

முந்தைய டீசர்கள்: முன்னதாக நத்திங் நிறுவனம், பிளாஸ்டாய்ஸ் (Blastoise) மற்றும் ஜம்ப்ளஃப் (Jumpluff) ஆகிய போக்கிமான்களின் படங்களை தனது தனித்துவமான டாட்-மேட்ரிக்ஸ் பாணியில் பகிர்ந்து இருந்தது. இது குறைந்தபட்சம் இரண்டு புதிய டிவைஸ்கள் வரவிருப்பதை உணர்த்துகிறது. வரவிருக்கும் புதிய தயாரிப்புகளுக்கான நிறுவனத்தின் இன்டர்னல் கோட் நேம்கள் தான் இந்த போக்கிமான் கதாபாத்திரங்கள் ஆகும்.

இந்த டீசர்கள் எந்த தயாரிப்பின் அறிமுகத்தை குறிப்பிடுகின்றன என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை, இருந்தாலும் மார்க்கெட் யூகங்களின்படி ஒரு புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம், சுவாரஸ்யமாக, நத்திங் இந்தியாவும் பிளாஸ்டாய்ஸ் டீசரை பகிர்ந்துள்ளது, இது வரவிருக்கும் புதிய நத்திங் தயாரிப்புகளில் குறைந்தபட்சம் ஒன்று இங்கே அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் குறிக்கிறது.

புதிய நத்திங்/சிஎம்எஃப் போன்: பிளாஸ்டாய்ஸ் டீசர், நத்திங் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக யூகங்களை தூண்டியுள்ளது. இந்த போக்கிமான் அதன் சக்தி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது, எனவே நத்திங் நிறுவனம் செயல்திறனை மையமாக கொண்ட ஒரு போனை அறிமுகப்படுத்தத் திட்டமிடலாம்.

புதிய நத்திங் இயர் 3ஏ மாடல்: ஜம்ப்ளஃப் டீசர் ஒரு ஆடியோ தயாரிப்புடன் தொடர்புடையதாகவே தெரிகிறது. சமீபத்திய லீக்கள், நத்திங் இயர் ஏ சீரீஸின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலான நத்திங் இயர் 3ஏ மாடலின் வெளியீட்டை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த இயர்பட்ஸ்களில் 11 மிமீ டைனமிக் டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ, LDAC ஆதரவு மற்றும் கஸ்டம் EQ கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 4b Expected to Launch after CMF Phone 3 Pro cancelled
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X