ரூ.4000 பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
நத்திங் பிரியர்கள் அடித்து பிடித்து வாங்கும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பிரத்யேக டிசைன் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவருதால், ஸ்மார்ட்போன்களின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, அதிக டிஸ்கவுண்ட் விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்க தொடங்கிவிட்டன. இதில் பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனானது 36 சதவீத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.31,999 விலைக்கு வாங்கலாம். இந்த டிஸ்கவுண்ட் போக தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதை பெற்றால், ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கொண்ட மாடலாக இந்த நத்திங் போன் 4பி இருக்கிறது.
ஏஜிசி டிடி-ஸ்டார் 2 (AGC DT Star 2) புரொடெக்சனுடன் 6.77 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) அமோலட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240 டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. பிரீமியம் கேமரா அவுட்புட் கொடுக்கும்படி சாம்சங் சென்சாரை பேக் செய்துள்ளது. மேலும், 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
இதுபோக ட்ரூலென்ஸ் என்ஜின் 4.0 (TrueLens Engine 4.0), அல்ட்ரா எச்டிஆர் (Ultra XDR) போன்ற பீச்சர்களையும் இந்த கேமராவில் பெற்று கொளலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி ஃபரன்ட் கேமராவை இந்த நத்திங் போன் 4பி கொடுக்கிறது. ஆனால், இதில் 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே செய்து கொள்ள முடியும்.
8.6 எம்எம் தடிமனுடன் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 210 கிராம் எடை வருகிறது. P64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்டை (Dust & Splash Resistant) உள்ளது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய மூன்று கலர்களில் இந்த நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
