Home
Mobile

செஞ்சி விட்டாப்ல.. ரூ.3,000 ஆஃபரில் 5400mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 5400mAh பேட்டரி, 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே ரூ.28,999 ஆரம்ப விலைக்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

செஞ்சி விட்டாப்ல.. ரூ.3,000 ஆஃபரில் 5400mAh பேட்டரி.. SONY கேமரா!

நத்திங் போன் 4ஏ அம்சங்கள் (Nothing Phone 4a Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கின்றன. 6.78 (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

480Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ்10+ (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. சாம்சங் ஜிஎன்9 (Samsung GN9) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

இந்த அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3.5x சென்சார் ஜூமிங் கிடைக்கிறது.

மேலும், 7x லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 70x அல்ட்ரா ஜூமிங் உள்ளது. ஆக்டிவ் மோட் (Active Mode) கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக சாம்சங் கேடி1 (Samsung KD1) சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த செல்பீ ஷூட்டருக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.55 எம்எம் தடிமன் மற்றும் 204.5 கிராம் எடை கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a With 8GB RAM Available At Rs 3000 Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X