வெளுத்து கட்டிய டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 50W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5400mAh பேட்டரி.. எந்த மாடல்?
இப்படிப்பட்ட ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைத்தால் விற்பனையில் பட்டையை கிளப்பாமல் இருக்குமா? என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. நத்திங் போன்களுக்கு தனி வரவேற்பு இருப்பதால், ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,999 விலைக்கு இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனை வாங்கலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு பிரத்யேகமாக ரூ.4,850 தள்ளுபடி கிடைக்கிறது.

நத்திங் போன் 4ஏ அம்சங்கள் (Nothing Phone 4a Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.78 (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த நத்திங் போன் 4ஏ மாடல் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிபிளஸ்10+ (HDR10+) கொண்ட டிஸ்பிளே மாடலாக இந்த நத்திங் போன் 4ஏ இருக்கிறது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் வருகிறது.
ஆகவே, தரமான பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். மேலும், இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) பேக் செய்யப்பட்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கப்பட்டு உள்ளன.
மேலும், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கேமராவில் பட்டையை கிளப்பும்படி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சாம்சங் ஜிஎன்9 (Samsung GN9) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
இதுபோக சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் . 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. இந்த டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 3.5x சென்சார் ஜூமிங் மட்டுமல்லாமல், 70x அல்ட்ரா ஜூமிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 7x லாஸ்லெஸ் ஜூமிங் கொண்ட கேமரா மாடலாகவும் இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் இருக்கிறது. சாம்சங் கேடி1 (Samsung KD1) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆக்டிவ் மோட் (Active Mode) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரியானது இந்த நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. 8.55 எம்எம் தடிமன் உள்ளது. டைப்-சி சார்ஜிங் மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. பிளாக், ஒயிட், பிங்க், ப்ளூ ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications