Home
Mobile

போட்டான் பாரு.. ஆக.1 முதல் விலை உயர்வு.. பேசிக் மாடலுக்கே ரூ.3000 எகிறுது.. Nothing Phone 4a போனின் புது விலை!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட நத்திங் பிரியர்களுக்கு கூடுதலாக செலவாகலாம். இது ஒட்டுமொத்த மாடல்களுக்கும் இருக்காது. லேட்டஸ்ட் மாடலாக களமிறங்கிய நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போனுக்கு இருக்கப் போகிறது. இதில் கிடைக்கும் மூன்று வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது.

இந்த விலை உயர்வு நத்திங் நிறுவனமும் உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) அவரது எக்ஸ் தளத்தில் தற்போதைய விலை மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் விலை விவரங்களை குறிப்பிட்டு இருக்கிறார். இதில் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.3,000 உயர்த்தப்பட இருப்பது தெரிகிறது.

போட்டான் பாரு.. ஆக.1 முதல் விலை உயர்வு.. பேசிக் மாடலுக்கே ரூ.3000!

இப்போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,999 ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.46,999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஈ-காமர்ஸ் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்கி கொள்ள கிடைக்கின்றன.

ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.46,999 ஆகவும் இருக்கப் போகிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999 ஆக இருக்கப் போகிறது. 1 நாள் வித்தியாசத்தில் ரூ.3,000 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.

ஆகவே, நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போதே வாங்கி கொள்ளலாம். நத்திங் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்ந்து வருவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. சிப் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

நத்திங் போன் 4ஏ அம்சங்கள் (Nothing Phone 4a Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த நத்திங் போன் 4ஏ உள்ளது.

3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வருகின்றன. 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. 6.78 (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மர்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி 1.5K ரெசொலூஷன் மற்றும் எச்டிபிளஸ்10+ (HDR10+) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி உள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Tipped To Price Hike in India From August 1 Check Current And New Pricing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X