Home
Mobile

மிட்-ரேன்ஜ் விலை மார்க்கெட்டில் புது போட்டியாளர்.. 12GB ரேம் உடன் புதிய Nothing போன்.. என்ன மாடல்?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் அடுத்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மாடலின் சிப்செட் (Chipset) விவரங்கள் கீக்பெஞ்ச் ஏஐ பெஞ்ச்மார்க் (Geekbench AI benchmark) வழியாக தெரிய வந்துள்ளது.

நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது A069 என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. பெஞ்ச்மார்க்கில் 12GB ரேம்-ஐ கொண்டுள்ளது. ஆனால் இத குறைந்த அளவிலான ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

12GB ரேம் உடன் புதிய Nothing போன்.. என்ன மாடல்?

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது பெஞ்ச்மார்க் ரன்னில், ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. முந்தைய வதந்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 2026 மார்ச் மாத தொடக்கத்தில் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மாடலுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்படலாம்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களில் ஒன்று குறைந்தபட்சம் UFS 3.1 ஸ்டோரேஜை பயன்படுத்தும், இது நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a ) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோவில் (Nothing Phone 3a Pro) மாடல்களில் உள்ள UFS 2.2 ஸ்டோரேஜை விட அதிகமாகும். புதிய மாடல்கள் - பிளாக், ஒயிட், பிங்க், யெல்லோ மற்றும் ப்ளூ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

முன்னதாக வெளியான தகவல், நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறின. பெயர் குறிப்பிடுவது போலவே நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி திறன்: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய தயாரிப்பு பதிவேட்டில் எனர்ஜி லேபிளிங் (EPREL) வலைத்தளத்தில் A069P என்கிற மாடல் நம்பரில் கீழ் ஒரு நத்திங் போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நம்பர் நத்திங் போன் 4ஏ ப்ரோவுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இது 50W சார்ஜிங் ஆதரவுடன் 5080mAh பேட்டரியை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.

மேலும் இந்த பட்டியல், நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி அதன் ஆரம்ப திறனில் 80 சதவீதத்தை அடைவதற்கு முன்பு 1,400 சார்ஜிங் சுழற்சிகளை தாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் இது பரிந்துரைக்கிறது. இது A முதல் E வரையிலான அளவில் பழுதுபார்க்கும் தன்மையில் C மதிப்பீட்டை காட்டுகிறது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள், செக்யூரிட்டி அப்டேட்கள், சரிசெய்தல் புதுப்பிப்புகள் மற்றும் செயல்பாட்டு புதுப்பிப்புகளை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 4ஏ ப்ரோவில் உள்ள 5,080mAh பேட்டரி ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோவிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.49,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடலுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Tipped to Powered by Snapdragon 7s Gen 4 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X