Home
Mobile

சாய்ச்சு புட்டான்.. மார்க்கெட்ல 2 புது Nothing Phone.. தலைவன் Carl Pei சொன்ன மாதிரியே PRICE பிச்சுக்கிச்சு!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் அடுத்த 2 புதிய ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது. யுஏஇ-யின் TDRA சான்றிதழ் தரவுத்தளத்தில் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) காணப்பட்டுள்ளது. இது நத்திங் போன் 4ஏ சீரீஸின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை (அல்லது உடனடி வெளியீட்டை) சுட்டிக்காட்டுகிறது.

நத்திங் போன் 4ஏ சீரிஸின் (Nothing Phone 4a Series) கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்ல 2 புது Nothing Phone.. PRICE பிச்சுக்கிச்சு!

முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்கள், நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், இன்னும் சரியாக மார்ச் 5 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகின்றன.

இந்த சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, மிதமான பேட்டரி மேம்படுத்தல் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆகிய அம்சங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவைகள் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு கலர்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

இந்த சீரிஸின் கீழ் வரும் ப்ரோ வேரியண்ட் ஆனது இசிம் கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் என்றும், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜை பெறும் என்றும் கூறப்படுகிறது. ஹார்ட்வேர் மேம்படுத்தல்கள், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு கூறுகள் மற்றும் கூறு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவைகள் அதிக விலை நிர்ணயத்தை பெறவும் வாய்ப்புள்ளது.

நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், அடுத்து வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் அவற்றின் முன்னோடிகளை விட அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று சூசகமாக கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ 43,000 க்கு அறிமுகமானது.

அதே சீரிஸின் கீழ் வரும் ப்ரோ மாடல் ஆன நத்திங் போன் 4ஏ ப்ரோவானது தோராயமாக ரூ.49,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கும், நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.27,999 க்கும் அறிமுகமானது.

நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களைஎதிர்பார்க்கலாம்? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய தயாரிப்பு பதிவேட்டில் எனர்ஜி லேபிளிங் (EPREL) வலைத்தளத்தில் A069P என்கிற மாடல் நம்பரில் கீழ் ஒரு நத்திங் போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நம்பர் நத்திங் போன் 4ஏ ப்ரோவுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இது 50W சார்ஜிங் ஆதரவுடன் 5080mAh பேட்டரியை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.

மேலும் இந்த பட்டியல், நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி அதன் ஆரம்ப திறனில் 80 சதவீதத்தை அடைவதற்கு முன்பு 1,400 சார்ஜிங் சுழற்சிகளை தாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் இது பரிந்துரைக்கிறது. இது A முதல் E வரையிலான அளவில் பழுதுபார்க்கும் தன்மையில் C மதிப்பீட்டை காட்டுகிறது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள், செக்யூரிட்டி அப்டேட்கள், சரிசெய்தல் புதுப்பிப்புகள் மற்றும் செயல்பாட்டு புதுப்பிப்புகளை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 4ஏ ப்ரோவில் உள்ள 5,080mAh பேட்டரி ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோவிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Series Launching Soon Why We Should Not Expect Cheap Prices like Phones 3a Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X