Home
Mobile

மார்ச் 5 க்கு குறிச்சாச்சு.. Nothing போன் 4ஏ சீரிஸ் சம்பவம் உறுதி.. 50W சார்ஜிங்.. 50MP கேமரா.. விலை எப்படி?

குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் நத்திங் போன் 4ஏ சீரிஸ் (Nothing Phone 4a Series) வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நத்திங் பிரியர்கள் குஷியாகிவிட்டனர். அதேபோல விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இந்த சீரிஸ் இருக்கப் போகிறது. எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.

வருகிற மார்ச் 5ஆம் தேதி நத்திங் போன் 4ஏ சீரிஸ் வெளியாக இருக்கிறது. நத்திங் சிஇஓ கார்ல் பெய், இதை எக்ஸ் தளம் வழியாக உறுதி செய்துள்ளார். இந்த தேதியை தவிர அந்த மாடல்களின் எந்தவொரு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மார்கெட்டில் இந்த விவரங்கள் கசிந்துவிட்டன. அதேபோல போஸ்டரும் கசிந்துள்ளது. இதில் 2 மாடல்களை எதிர்பார்க்கலாம்.

மார்ச் 5 க்கு குறிச்சாச்சு.. Nothing போன் 4ஏ சீரிஸ் சம்பவம் உறுதி!

ஆகவே, நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய மாடல்களை எதிர்பார்க்கலாம். இந்தியாவில் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சொல்லப்போனால், மார்ச் 4ஆம் தேதி இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதனாலேயே, மார்ச் மாதத்தில் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் வெளியாகும் என்பதை அறிய முடிகிறது. மேலும், நத்திங் போன் 4ஏ லைட் (Nothing Phone 3a Lite) மாடலும் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த லைட் மாடலின் வெளியீடானது, இந்தியாவில் நவம்பர் மாதத்தில் இருந்தது.

ஆகவே, இப்போதைக்கு நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்களை மட்டும் மார்ச் 5ஆம் தேதி எதிர்பார்க்கலாம். முந்தைய மாடல்களைவிட அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்கள் மற்றும் டிசைனை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஒவ்வொரு மாடல்களுக்கும் நத்திங் நிறுவனம் புதிய டிசைனை கொடுத்து வருகிறது. இப்போது, எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பார்க்கலாம்.

நத்திங் போன் 4ஏ சீரிஸ் அம்சங்கள் (Nothing Phone 4a Series Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த நத்திங் போன் 4ஏ சீரிஸ் கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1.5K ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட்டை கொடுக்க உள்ளது.

நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனில் பிளாக் மற்றும் ஒயிட் கலர்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்க இருக்கிறது. நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் பிளாக் (Black) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கிறது. இதிலும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வர இருக்கிறது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,100mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,000 பட்ஜெட்டிலும் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.40,000 பட்ஜெட்டிலும் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Series Launch Date in Confirmed in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X