வெளுக்குது விற்பனை.. ரூ.4,000 ஆஃபரில் Nothing போன்.. 5400mAh பேட்டரி.. 50W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
கிளைப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. சோனி சென்சார் மெயின் கேமரா, 50W ஃபாஸ்ட் சாரஜிங் மற்றும் 5400mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த நத்திங் போன் 4ஏ ப்ரோவின் தள்ளுபடி விவரங்கள் இதோ.
ரியர் கேமராவுக்கு அருகில் இந்த கிளைப் மேட்ரிக்ஸ் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே இருக்கிறது. 137 மினி எல்இடிகளை கொடுத்து உள்ளது. 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பேட்டரி, டைமர், டிஜிட்டல் கிளாக், கிளைப் மிரர் உள்ளிட்ட ஆப்ஷன்களை கொடுக்கிறது. நோட்டிபிகேஷன்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். பெரிஸ்கோப் கேமராவுடன் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 சதவீத தள்ளுபடி போக ரூ.42,999 விலையில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.38,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது.
பிளாக் (Black), சில்வர் (Silver) மற்றும் பிங்க் (Pink) கலர்களில் கிடைக்கிறது. 7X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 140X ஹைபிரிட் ஜூம் (Hybrid Zoom) கொண்ட கேமரா கிடைப்பதால், இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இந்த நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
நத்திங் போன் 4ஏ ப்ரோ அம்சங்கள் (Nothing Phone 4a Pro Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது.
மேலும், நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கொடுக்கும்படி 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் (260 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்காக 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ஓடிடி பிரியர்களுக்கா எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைத்து உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி எல்ஒய்டி700சி (Sony LYT700c) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்பா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 7எக்ஸ் இன்-சென்சார் ஜூம் மற்றும் 140எக்ஸ் ஹபிரிட் ஜூம் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஆக்சன் மோட், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.
சாம்சங் கேடி1 சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 5400mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 7.9 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடையை கொடுத்து உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications








