அவ்ளோ தான்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த கார்ல் பெய்... பட்ஜெட் விலையில் 2 புது Nothing போன்கள்!
நத்திங் (Nothing) நிறுவனம் சரியான "கம்பேக்" கொடுக்க வேண்டுமென்கிற முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. பல்பு வாங்கிய நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன்; அதை அடிமட்ட ஆபர் விலையில் விற்பனை செய்தது; பின் அறிமுகமாகி 1 ஆண்டுக்கு பின் நத்திங் இயர் ஓப்பன்-ஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது என.. என்ன செய்தாலும் நத்திங் நிறுவனத்திற்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை!
ஆகையால் நிலைமையை சரிசெய்ய நத்திங் நிறுவனம் தன்னிடம் இருக்கும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது. நத்திங் நிறுவனத்தின் போன் 2ஏ சீரீஸ் (Nothing Phone 2a Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. அதனை தொடர்ந்து "வேக வேகமாக" (நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செய்யாமலேயே) நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

அதே பாணியில் இப்போது நத்திங் போன் 4ஏ சீரிஸ் (Nothing Phone 4a Series) அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்கீழ் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) என மொத்தம் 2 மாடல்கள் வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் நத்திங் போன் 3ஏ சீரிஸை போல் (மார்ச் 2024 இல்) இல்லாமல், முன்கூட்டியே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 4ஏ சீரிஸ் எப்போது அறிமுகமாகும் (Nothing Phone 4a Series Launch Timeline)? இது 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வெளியிடப்படலாம். சரியான வெளியீட்டு தேதி இன்னும் ரகசியமாகவே இருந்தாலும், முன்னரே குறிப்பிட்டபடி கடந்த ஆண்டு நடந்த (நத்திங் போன் 3ஏ சீரிஸின்) மார்ச் மாத வெளியீட்டை விட, இது சற்று முன்னதாக (ஜனவரியில்) வெளியிடப்படுவது, புத்தாண்டின் போது நல்ல விற்பனையை தூண்டலாம்.
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Nothing Phone 4a Pro Expected Price in India)? லீக் ஆன அறிக்கைகளின்படி, நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.35,000 ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.29,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Nothing Phone 4a Pro Expected Specifications)? டிசைனை பொறுத்தவரை, நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph interface) மற்றும் செமி-டிரான்ஸ்ப்ரென்ட் வடிவமைப்புடன் (Semi-transparent design) புதுப்பிக்கப்பட்ட மற்றும் தனித்துவமான டிசைனை பெறலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது - கடந்த ஆண்டை போலவே - 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.77-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகலாம். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட, ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் ( Snapdragon 7 series) அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மூலம் (Snapdragon 8s Gen 3) இயக்கப்படலாம்.
பல மாடல்கள் 7000mAh பேட்டரியை குறிவைப்பதால் - நத்திங் போன் 4ஏ ப்ரோ ஆனது முன்னதாக வந்த ஏ சீரிஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மேம்படுத்தப்படலாம்; ஆனால் 7000mAh பேட்டரியை எதிர்பார்க்க வேண்டாம். கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இருப்பினும், சென்சார்கள் மற்றும் பிற விவரங்கள்ரகசியமாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications








