Home
Mobile

Nothing-ன் புதிய Pro மாடல்.. 5080mAh பேட்டரி, 50W சார்ஜிங், 5 ஆண்டு OS அப்டேட், IP65 ரேட்டிங்!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படவுள்ள நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் குறித்து மேலும் சில விவரங்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் குறித்த விவரம் வெளியாகி இருந்தது. இப்போது நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி திறன் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது

முன்னதாக வெளியான தகவல், நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறின. பெயர் குறிப்பிடுவது போலவே நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

Nothing-ன் புதிய Pro மாடல்.. 5080mAh பேட்டரி, 50W சார்ஜிங்!

நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி திறன்: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய தயாரிப்பு பதிவேட்டில் எனர்ஜி லேபிளிங் (EPREL) வலைத்தளத்தில் A069P என்கிற மாடல் நம்பரில் கீழ் ஒரு நத்திங் போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நம்பர் நத்திங் போன் 4ஏ ப்ரோவுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இது 50W சார்ஜிங் ஆதரவுடன் 5080mAh பேட்டரியை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.

மேலும் இந்த பட்டியல், நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி அதன் ஆரம்ப திறனில் 80 சதவீதத்தை அடைவதற்கு முன்பு 1,400 சார்ஜிங் சுழற்சிகளை தாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் இது பரிந்துரைக்கிறது. இது A முதல் E வரையிலான அளவில் பழுதுபார்க்கும் தன்மையில் C மதிப்பீட்டை காட்டுகிறது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள், செக்யூரிட்டி அப்டேட்கள், சரிசெய்தல் புதுப்பிப்புகள் மற்றும் செயல்பாட்டு புதுப்பிப்புகளை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 4ஏ ப்ரோவில் உள்ள 5,080mAh பேட்டரி ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோவிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.49,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடலுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

2026 இல் விலை அதிகரிக்கும் நத்திங் ஸ்மார்ட்போன்கள்: மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப பிராண்டுகள் ஆனது மெமரி விலை நிர்ணயத்தில் (Memory Pricing) ஏற்பட்டு உள்ள உயர்வு காரணமாக தங்களுடைய தயாரிப்புகளின் "விலைகளை உயர்த்துவதில்" (Price Hike) கவனம் செலுத்தி வருகின்றன; 2026 க்கான விலை உயர்வை பரிசீலித்து வருகின்றன.

இந்த போக்கில் கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமும் இணைகிறது. அதாவது 2026 ஆம் ஆண்டு வெளியாகும் நத்திங் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. இதோடு நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி - எங்களுடைய போட்டியாளர்களும் கூட இதையே தான் செய்வார்கள் அல்லது அதிகரித்த செலவுகளை சமாளிக்க அம்சங்களை குறைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், 2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் நிலப்பரப்பை எவ்வாறு பார்க்கிறார் என்பதை விரிவாக கூற லிங்க்ட்இனில் ஒரு பதிவை எழுதினார். தொழில்துறை முழுவதும் கூர்மையான விலை உயர்வை எதிர்பார்க்கலாம் அல்லது உற்பத்தியில் வேறு இடங்களில் பணத்தை மிச்சப்படுத்த சில பிராண்டுகள் ஸ்பெக் மேம்படுத்தல்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Pro Battery Capacity Charging Speed IP Rating Details Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X