Home
Mobile

பய புடிச்சுட்டான்.. PINK கலரில் புதிய Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் நிறுவனம் வருகிற மார்ச் 5 ஆம் தேதி அன்று 2 புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்பதை உங்களில் பலரும் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். அது நத்திங் போன் 4ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாக உள்ளது.

இது தொடர்பான லேட்டஸ்ட் டீஸரில் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிங்க் கலர் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த கலர் ஆப்ஷனுமே டிரான்ஸபிரென்ட் பேக் பேனல் மற்றும் நத்திங்கின் சிக்னேச்சர் லைட்டிங் இன்டர்பேஸ் டிசைன் உடன் வருகிறது.

பய புடிச்சுட்டான்.. PINK கலரில் புதிய Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவில் பிங்க் கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக டீஸ் செய்யப்பட்ட ஒயிட் கலர் ஆப்ஷன் வழியாக, நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலுக்கு வெளியே எல்இடி ஃபிளாஷ் வைக்கப்பட்டு இருப்பதையும், டேப்லெட் வடிவ மாட்யூலுக்குள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருப்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

முன்னதாக வெளியான மாடல்களை போலவே நத்திங் போன் 4ஏ மாடலும் கூட "வெளிப்படையான" (டிரான்ஸபிரென்ட்) பேக் பேனல் வடிவமைப்பை தக்க வைத்து கொண்டுள்ளது மற்றும் இதில் புதிய கிளிஃப் பார் நோட்டிபிகேஷன் சிஸ்டமை உள்ளடக்கியிருக்கலாம். பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் உள்ளது, அதே நேரத்தில் இடது விளிம்பில் சில கூடுதல் பட்டன்களும் உள்ளன.

பய புடிச்சுட்டான்.. PINK கலரில் புதிய Nothing போன்.. எந்த மாடல்?

இங்கிலாந்தை தளமாக கொண்ட இந்த தொழில்நுட்ப நிறுவனம் ஏற்கனவே நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) சிப்செட்டில் இயங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 7s Gen 4 சிப்செட் கொண்டு இயங்கலாம். இது 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,400mAh பேட்டரியை பேக் செய்யலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவுடன் வரலாம்.

பய புடிச்சுட்டான்.. PINK கலரில் புதிய Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் போன் 4ஏ சீரிஸின் ப்ரோ மாடலும் இந்த ஆண்டு பெரிய மேம்படுத்தல்களை பெறலாம். இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 140எக்ஸ் வரை ஜூம் திறன்களுடன் 50MP சோனி ப்ரைமரி கேமராவை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிக பயன்பாட்டின் போது வெப்பச் சிதறலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட யூனிபாடி அலுமினிய பிரேமையும் கொண்டிருக்கலாம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அதன் முன்னோடியை விட சற்று பெரியதாகும், வேகமானதும் கூட. மற்றொரு சாத்தியமான கூடுதலாக இதுவும் Glyph Matrix லைட்டிங் சிஸ்டமை (சிக்னேச்சர் LED நோட்டிபிகேஷன்டிசைன்) பெறலாம்.

எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, முந்தைய ஜெனரேஷன் உடன் ஒப்பிடும்போது நத்திங் போன் 4ஏ சீரீஸின் விலை நிச்சயமாக உயரும். இன்னும் சொல்லப்போனால் அதிகமாகவே உயரும். நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி / 256 ஜிபி ஆப்ஷன் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் €409 க்கு (சுமார் ரூ.44,000) தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஸ்மார்ட்போன் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் €389 க்கு (சுமார் ரூ.42,009) அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் 12 ஜிபி ஆப்ஷனின் விலை €449 (சுமார் ரூ.48,000) மற்றும் €429 (46,000) ஆக இருக்கலாம். நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB / 128GB ஆப்ஷன் ஆனது €499 (சுமார் ரூ.53,500) மற்றும் €479 (சுமார் ரூ.51,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Pink Colour Option Confirmed Ahead India Launch on March 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X