Home
Mobile

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 12GB ரேம்.. 5088mAh பேட்டரி.. 50W சார்ஜிங்.. புது Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் பிரியர்கள் மட்டுமல்லாமல், டிரான்ஸ்பரன்ட் டிசைனில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் ஒட்டுமொத்த பேரையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த நத்திங் போன் 4ஏ சீரிஸ் (Nothing Phone 4a Series) மாடல்களின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்த நத்திங் போன் 4ஏ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மாடல்கள் கடந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவிலும் மார்ச் மாதம் வெளியாகியது. ஆகவே, வருகிற மார்ச் மாதத்தில் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 12GB ரேம்.. 5088mAh பேட்டரி.. மாடல்?

இதற்கு ஏற்ப அந்த மாடல்களின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போரின் எக்ஸ் தளத்தில் இந்த விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதில் பிளாக் கலர் மட்டும் பொதுவாக 2 மாடல்களிலும் கிடைக்க உள்ளது. மற்ற கலர்கள் பிரத்யேகமாக ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடுகிறது.

அதாவது, நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல்களில் பிளாக் (Black) கலர் கிடைக்கும். ஆனால், ஒயிட் கலர் வேரியண்ட்டானது நத்திங் போன் 4ஏ மாடலில் மட்டுமே கிடைக்கும். நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடலுக்கு சில்வர் எடிஷன் கிடைக்கும். மேலும், ப்ளூ மற்றும் பிங்க் எடிஷன்களும் கிடைக்க உள்ளது. இப்போது, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களை பார்க்கலாம்.

நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல்களில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. முன்னதாக நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5088mAh பேட்டரி கிடைக்க இருப்பது தெரியவந்தது.

நத்திங் போன் 3ஏ சீரிஸ் அம்சங்கள் (Nothing Phone 3a Series Specifications): 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

நத்திங் போன் 3ஏ மாடலில் சாம்சங் சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலில் சோனி சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. அதேபோல ப்ரோ மாடலில் 50 எம்பி செல்பீ ஷூட்டரும், நத்திங் போன் 3ஏ மாடலில் 32 எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டு உள்ளது. 50W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Phone 4a Pro With 8GB RAM 128GB Storage Revealed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X