Home
Mobile

தலை சுத்துது டா சாமி.. Nothing Phone 4a மற்றும் Phone 4a Pro விலைகள் லீக்.. அம்சங்கள் தரம்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்புகளுக்கான வெளியீடு தேதி ஆக மார்ச் 5, 2026 ஐ நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பிட்ட நாளில் பிரெஞ்சு நேரப்படி காலை 11:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் நத்திங் நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவைகள் - நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a), நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மாடல்களாக இருக்கலாம். இதோடு சேர்த்து நத்திங் ஹெட்ஃபோன் ஏ (Nothing Headphone a) மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone 4a மற்றும் Phone 4a Pro விலைகள் லீக்.. அம்சங்கள் தரம்!

என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகியுள்ள நிலையில், டீலாப்ஸ் பில்பில் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய லீக்ஸ், வரவிருக்கும் 2 புதிய போன்களின் பெரும்பாலான அம்சங்கள், வேரியண்ட்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளன.

குறிப்பாக ப்ரோ மாடல் ஆனது இந்த ஆண்டு பெரிய மேம்படுத்தல்களை பெறுவதாகத் தெரிகிறது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 140எக்ஸ் வரை ஜூம் திறன்களுடன் 50MP சோனி ப்ரைமரி கேமராவை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிக பயன்பாட்டின் போது வெப்பச் சிதறலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட யூனிபாடி அலுமினிய பிரேமையும் கொண்டிருக்கலாம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அதன் முன்னோடியை விட சற்று பெரியதாகும், வேகமானதும் கூட. மற்றொரு சாத்தியமான கூடுதலாக இது ஒரு Glyph Matrix லைட்டிங் சிஸ்டமையும் பெறலாம். அறியாதோர்க்ளுக்கு இது நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் LED நோட்டிபிகேஷன்டிசைன் ஆகும்.

சுவாரசியமாக ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி இது மூன்று 50MP ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். இது 0.6x அல்ட்ரா-வைட் வியூ மற்றும் 70x வரை ஜூம் செய்வதை ஆதரிக்கலாம்.

செல்பீகள் மற்றும் வீடியோ கால்புகளுக்கு இது 32MP கேமராவை பேக் செய்யலாம். இது லைட்டிங் விளைவுகளுக்காக 63 மினி-LEDகளால் ஆன கிளிஃப் பார் டிசைன் உடன், நத்திங்கின் டிரான்ஸ்பரென்ட் டிசனையும் தக்கவைத்து கொள்ளலாம். இது 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

நத்திங் போன் 3ஏ மாடலுடன் ஒப்பிடும் போது நத்திங் போன் 4ஏ மாடலின் பேட்டரி லைஃப் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 50W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் கொண்டு இயங்கலாம்.

லீக் ஆன விவரங்களின்படி - இரண்டு போன்களுக்கும் இடையிலும் ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் வேறுபடும். நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே வெளியிடப்படலாம், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். இது பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய 2 கலர்களில் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பிங்க் மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷன்கள் 12 ஜிபி மாடலுக்கு மட்டுமே வரம்பிடப்படலாம்.

மறுகையில் உள்ள நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி / 128ஜிபி மற்றும் 12 ஜிபி / 256 ஜிபி ஆப்ஷன்களில் வரும் என்று வதந்தி பரவியுள்ளது. இது பிளாக் மற்றும் சில்வர் ஆகிய 2 கலர்களில் கிடைக்கும்; பிங்க் கலர் ஆப்ஷன் ஆனது "மறுபடியும்" ஹை எண்ட் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கலாம்.

விலையை பொறுத்தவரை, முந்தைய ஜெனரேஷன் உடன் ஒப்பிடும்போது நத்திங் போன் 4ஏ சீரீஸின் விலை நிச்சயமாக உயரும்; அதிகமாகவே உயரும். நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி / 256 ஜிபி ஆப்ஷன் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் €409 க்கு (சுமார் ரூ.44,000) தொடங்கலாம்.

ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் €389 க்கு (சுமார் ரூ.42,009) தொடங்கலாம். அதே நேரத்தில் 12 ஜிபி ஆப்ஷன் €449 (சுமார் ரூ.48,000) மற்றும் €429 (46,000) ஆக இருக்கலாம். நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB / 128GB ஆப்ஷன் ஆனது €499 (சுமார் ரூ.53,500) மற்றும் €479 (சுமார் ரூ.51,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Phone 4a Pro Specs Prices Colors Storages Leaked Ahead March 5 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X