Home
Mobile

பின்னி பெடல் எடுக்கும் பிளிப்கார்ட் GOAT சேல்.. ஆரம்ப விலைக்கே திரும்பிய லேட்டஸ்ட் Nothing 5ஜி போன்கள்!

ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் கோட் விற்பனையின் (Flipkart GOAT Sale) போது, நத்திங் (Nothing) நிறுவனமானது என்னென்ன நத்திங் போன்கள் (Nothing Phones) மற்றும் நத்திங் ஆடியோ தயாரிப்புகள் (Nothing Audio Products) மீது சலுகைகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது

இந்த விற்பனையின் போது நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.32,999 என்ற பயனுறு விலையில் (effective price) கிடைக்கும். மேலும் இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளின் போது ரூ.4,000 உடனடி வங்கித் தள்ளுபடி அல்லது கூடுதலாக ரூ.3,000 பரிமாற்ற போனஸ் (exchange bonus) வழங்கப்படும்.

ஆரம்ப விலைக்கே திரும்பிய லேட்டஸ்ட் Nothing 5ஜி போன்கள்!

இதன் மூலம் சமீபத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ள நத்திங் போன் 4ஏ-வின் விலையை, அதன் அறிமுக விலையான ரூ.31,999 க்கு மிக நெருக்கமாக கொண்டுவர முடியும். தற்போது இந்த ஸ்மார்ட்டனின் விலை ரூ.39,999 ஆக உள்ளது. எனவே, இந்த சலுகைகளுடன் சேர்த்து பார்க்கும்போது, போன் 4ஏ மாடலை இந்த விலையில் வாங்குவது மிகவும் லாபகரமானதாக இருக்கும்.

இதேபோல, நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மாடலானது ரூ.41,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். இதற்கு இஎம்ஐ பரிவர்த்தனைகளின்போது ரூ.5,000 வரையிலான உடனடி வங்கித் தள்ளுபடி அல்லது அதற்கு இணையான எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது

நத்திங் போன் 4ஏ மாடலை போலவே நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் திறன் கொண்ட பேஸிக் மாடலின் விலை ரூ.49,999 ஆக உள்ளது. பிளிப்கார்ட் கோட் சேல் சலுகைகள் இதன் விலையை ரூ.8,000 வரை குறைக்கின்றன. ஆக இதுவும் நல்ல டீல் தான்.

நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 30Hz முதல் 120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- LPDDR4X ரேம்
- UFS 3.1 ஸ்டோரேஜ்

- 5,400mAh பேட்டரி
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP64 ரேட்டிங்
- 2 ஹை டிபெனிஷன் மைக்குகள்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்

நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- செமி டிரான்ஸ்பரென்ட் டிசைன் - பேக் பேனலில் கிளிஃப் மேட்ரிக்ஸ் டிசைன்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.83-இன்ச் 1.5K பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான Nothing OS 4.1

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 32MP செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,400mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்

பிளிப்கார்ட் கோட் விற்பனையின் ஒரு பகுதியாக, நத்திங் நிறுவனம் தனது ஹெட்போன் 1 ('Headphone 1) மாடலை ரூ.16,999 என்கிற ஆபர் விலையில் விற்பனை செய்யும் .மேலும் விற்பனை காலம் முழுவதும் நத்திங் இயர் ஏ (Nothing Ear a) மாடல் ஆனது ரூ.4,999 க்கும், நத்திங் இயர் (Nothing Ear) ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இதோடு சிஎம்எப் பட்ஸ் 2 சீரீஸ் (CMF Buds 2 Series), சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) மற்றும் சார்ஜர்கள் போன்ற பிற பொருட்களும் பிளிப்கார்ட் கோட் சேலின் போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் மற்றும் குறையாத அறிகுறிகளே இல்லாத விலை உயர்வுகளை கருத்தில் கொள்ளும்போது, மேற்கண்ட எல்லா ஆபர்களுமே நல்ல டீல்களாகவே தெரிகிறது. குறிப்பாக நத்திங் போன் 4ஏ சீரீஸ்!

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Phone 4a Pro Smartphone Deals Revealed on Flipkart GOAT Sale Starts July 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X