பிச்சு உதறும் பேசிக் வேரியண்ட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5400mAh பேட்டரி.. 50W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் டிரான்ஸ்பரன்ட் லுக் கொடுக்கும் மாடல்களுக்கு தனியிடம் பிடித்த நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4பி மாடல்களில் புதிய பேசிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 6 ஜிபி ரேம் வேரியண்ட்டாக இருப்பதால், முன்பு வெளியான மாடல்களைவிட மலிவான விலைக்கு கிடைக்க இருக்கின்றன.
நத்திங் போன் 4ஏ விலை (Nothing Phone 4a Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. ஏற்கனவே, வெளியான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.50,999ஆக இருக்கிறது.

நத்திங் போன் 4பி விலை (Nothing Phone 4b Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. ஏற்கனவே, வெளியான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கின்றன.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. பேஸ் வேரியண்ட்கள் வெளியாகினாலும், ஆரம்ப விலையே ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் இருப்பதால், பட்ஜெட் பிரியர்களுக்கு இது காஸ்ட்லீ மாடல்களாகவே தெரிகின்றன. அதே நேரத்தில், நத்திங் நிறுவனம், தனது ஸ்மார்ட்போன்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதும் கவனிக்கப்பட வேண்டியது.
நத்திங் போன் 4ஏ அம்சங்கள் (Nothing Phone 4a Specifications): 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கிடைத்து இருக்கிறது. சாம்சங் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
மேலும், சாம்சங் சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 4K ரெக்கார்டிங் மற்றும் ஆக்சன் மோட் கிடைக்கிறது. சாம்சங் சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிங்க், ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
நத்திங் போன் 4பி அம்சங்கள் (Nothing Phone 4b Specifications): 6.77 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4என்எம் சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 33W சார்ஜிங், 6000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications
