Home
Mobile

கலக்குறே கார்ல் பெய்.. மிட்-ரேன்ஜ் விலையில் 2 புதிய Nothing போன்கள்.. மஞ்சள் கலரில் புது ஹெட்போன்!

இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் நத்திங் நிறுவனத்தின் சிஏ மாடல் ஆக நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் அறிமுகமான வேகத்தில்.. அடுத்த நத்திங் போன் 4ஏ சீரீஸ் (Nothing Phone 4a series) ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

லேட்டஸ்ட் லீக் ஒன்றின்படி - கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போன்களை நத்திங் போன் 4ஏ சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யும். இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்கள் (முதலில்) அறிமுகம் செய்யப்படலாம் (பின்னர் "லைட்" மாடல் வெளியாகலாம்).

கலக்குறே கார்ல் பெய்.. மிட்-ரேன்ஜ் விலையில் 2 புதிய Nothing போன்கள்!

நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய 2 மாடல்களுமே ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட்களால் இயக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களும் நான்கு கலர்களில் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும் இவ்விரு மாடல்களில் ஒன்று மட்டுமே இசிம்-க்கான ஆதரவுடன் (eSIM Support) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெவலப்பர் MlgmXyysd வழியாக டெலிகிராமில் வெளியிட்ட சமீபத்திய பதிவின்படி, நத்திங் போன் 4ஏ சீரீஸின் இரண்டு மாடல்களும் உருவாக்கத்தில் உள்ளன. ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் சீரீஸ் சிப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் வலுவான செயல்திறனுக்காக 7 சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

இது துல்லியமாக மாறினால், நத்திங் போன் 3ஏ மற்றும் போன் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டும் ஒரே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டை பேக் செய்வதால், தற்போதைய சீரீஸில் இருந்து ஒரு மாற்றத்தை குறிக்கும். சீரிஸில் உள்ள ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 4ஏ ப்ரோ அதன் "முன்னோடியை" போலவே இசிம் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

நத்திங் போன் 4ஏ சீரீஸின் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை - பிளாக், ப்ளூ, பிங்க் மற்றும் ஒயிட் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும் இந்த நான்கும் நத்திங் போன் 4ஏ மற்றும் போன் 4ஏ ப்ரோ மாடல்களில் கிடைக்குமா என்கிற விவரத்தை டிப்ஸ்டர் வெளியிடவில்லை.

நத்திங் போன் 4ஏ சீரிஸில் உள்ள உள்ள இரண்டு மாடல்களுமே 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய ஆப்ஷனை கொண்ட நத்திங் போன் 4ஏ மாடலின் விலை $475 (தோராயமாக ரூ.43,000) ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடலின் விலை $540 (தோராயமாக ரூ.49,000) ஆக இருக்கலாம்.

நத்திங் போன் 4ஏ சீரீஸ் உடன் சேர்த்து நத்திங் நிறுவனம் ஆனது அடுத்த நத்திங் ஹெட்ஃபோனை (Nothing Headphone) அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் டிப்ஸ்டர் குக்குறிப்பிட்டு உள்ளார். ஆக கடந்த ஜூலை மாதம் நத்திங் ஹெட்ஃபோன் 1 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இரண்டாவது ஓவர்-இயர் மாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூறப்படும் ஹெட்ஃபோன்ஸ் ஆனது நத்திங் ஹெட்ஃபோன் 1 மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும், மேலும் அவை பிளாஸ்டிக் பாடி உடன் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது பிளாக், பிங்க், ஒயிட் மற்றும் யெல்லோ ஆகிய 4கலர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Nothing Phone 4a Pro Specifications Price Details Leaked May Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X