Home
Mobile

Carl Pei சார்.. இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்.. பட்ஜெட் விலையில் புது Nothing போன்.. எந்த மாடல்?

யாரு கேட்டாங்க.. ரூ.79,999 க்கு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன்.. இதைத்தான் உங்ககிட்ட இருந்து நாங்க எதிர்பார்த்தோம் - என்று நத்திங் நிறுவனத்தை பார்த்து கூறும்படியாக.. கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

எந்த மாடல்? அது நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மாடல் ஆகும். நத்திங் நிறுவனம் இன்னும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பிஐஎஸ் (BIS) என்கிற இந்திய தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards) இந்த ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புது Nothing போன்.. எந்த மாடல்?

எப்போது அறிமுகமாகும்? வழக்கமாக பிஐஎஸ் தளத்தில் காணப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை காணும். ஆக எப்படி பார்த்தாலும் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 2026 வாக்கில், நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மாடலுடன் சேர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

என்ன விலைக்கு வரும்? நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.25,999 முதல் ரூ.29,999 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலுடன் சேர்த்து கடந்த மார்ச் 2025 இந்தியாவில் அறிமுகமானது. நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.22,999 என்றும், நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.27,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிசைனை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ மாடலில் உள்ள வடிவமைப்பிலிருந்து விலகி, நத்திங் போன் 4ஏ மாடல் ஆனது அதன் பேக் பேனலில் ஒரு தனித்துவமான வடிவத்துடன் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தை (Refreshed look with distinct pattern) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ்ரெஃப் ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits Peak Brightness) உடனான 6.82-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டிருக்கலாம்.

அதாவது இது நத்திங் போன் 3ஏ மாடலின் டிஸ்பிளேவை விட இது பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கலாம் என்று அர்த்தம். மேலும் நத்திங் நிறுவனம் இதற்கு முன்பு பயன்படுத்தாத பாண்டா கிளாசரி (Panda Glass) உடன் டிஸ்பிளே ப்ரொடெக்ஷனை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset) கொண்டு இயங்கலாம். இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கலாம்

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, நத்திங் போன் 3ஏ மாடலை போலவே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பெறலாம். பேட்டரி குறித்த விவரங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a Found in BIS So India Launch is Very Near Check Out Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X