ஆள விட்றா சாமி.. இதோடு 3வது விலை உயர்வு.. ரூ.10000 வரை விலை எகிறிய 2 Nothing போன்கள்!
நத்திங் (Nothing) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் ஆன நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகியவற்றின் விலைகளை மீண்டும் உயர்த்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகமானதிலிருந்து இது மூன்றாவது விலை உயர்வாகும். டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் (Sanju Choudhary) கூற்றுப்படி, இந்த சமீபத்திய விலை மாற்றத்தின் மூலம் நத்திங் போன் 4ஏ சீரீஸ் போன்களின் விலைகள் மேலும் ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ விற்பனையாளரான பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இன்னும் முந்தைய விலை உயர்வுக்கு பிந்தைய விலைகளே காட்டப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் பழைய விலை நிர்ணயம் மற்றும் புதிய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 இல் இருந்து ரூ.37,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.39,999 ஆக உயர்ந்து உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.43,999 ஆக உயர்ந்துள்ளது
12ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 இல் இருந்து ரூ.43,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.46,999 ஆக உயர்ந்துள்ளது
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பழைய விலை நிர்ணயம் மற்றும் புதிய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 இல் இருந்து ரூ.49,999 ஆக உயர்ந்து, தற்போதைய விலை விவரம் இல்லை.
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 இல் இருந்து ரூ.52,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.54,999 ஆக உயர்ந்துள்ளது
12ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 இல் இருந்து ரூ.55,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.59,999 ஆக உயர்ந்துள்ளது
நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 30Hz முதல் 120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- LPDDR4X ரேம்
- UFS 3.1 ஸ்டோரேஜ்
- 5,400mAh பேட்டரி
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP64 ரேட்டிங்
- 2 ஹை டிபெனிஷன் மைக்குகள்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- செமி டிரான்ஸ்பரென்ட் டிசைன் - பேக் பேனலில் கிளிஃப் மேட்ரிக்ஸ் டிசைன்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.83-இன்ச் 1.5K பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான Nothing OS 4.1
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 32MP செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,400mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்


Click it and Unblock the Notifications