Home
Mobile

சுடத் தண்ணீல கை விட்டுடீங்களே சார்.. இனி இந்த 2 Nothing போன்களும் அம்பேல்.. ஏன்?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள கஸ்டமர்கள், "நமக்கு இதெல்லாம் தேவையா ப்ரோ" என்று கேட்கும் படியான ஒரு வேலையை பார்த்துள்ளது கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம். நத்திங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மாடல்கள் ஆன நாத்திக போன் (4ஏ) மற்றும் போன் (4ஏ) ப்ரோ ஆகியவற்றின் விலைகளை, கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக (ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் படியாக) உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே நத்திங் போன் (3) மாடலானது ரூ.80000 என்கிற ஓவர் ரேட்டில் அறிமுகமாகி.. ஆபர் விலையிலும் கூட வாங்க ஆள் இல்லாமல் ஈயடித்து கொண்டிருக்கும் வேளையில், ஓரளவு நன்றாக விற்பனையாகும் நத்திங் போன் 4ஏ சீரீஸின் மீதான இரண்டாவது விலை உயர்வு - நிச்சயமாக தேவை இல்லாத ஆணி தான்!

இனி இந்த 2 Nothing போன்களும் அம்பேல்.. ஏன்?

ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளுக்கு நத்திங் நிறுவனம் அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்ட இந்த விலை உயர்வின்படி, ப்ரோ மாடலுக்கு ரூ.5,000 வரையிலும், ஸ்டாண்டர்ட் மாடலுக்கு ரூ.3,000 வரையிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாத விலை உயர்வின் அளவை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கிறது.

இதற்கான அடிப்படைக் காரணம் பெரும்பாலும் - நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதைய ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றாக்குறையால் உலகளாவிய மெமரி செலவுகள் அதிகரித்து வருவதுதான் இதற்கும் காரணம். இந்த பிரச்சினை - இந்தியாவில் உள்ள ஏறக்குறைய அனைத்து முக்கிய ஆண்ட்ராய்டு பிராண்டுகளையும் இந்த ஆண்டு விலைகளை உயர்த்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

நத்திங் போன் (4ஏ) ப்ரோவின் ஆரம்ப விலை இப்போது ரூ.49,999 ஆக உயர்ந்துள்ளது: நத்திங் போன் (4ஏ) ப்ரோவின் மூன்று வேரியண்டுகளிலும் தலா ரூ.5,000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி +128ஜிபி - ரூ.44,999 இல் இருந்து ரூ.49,999 ஆகவும், 8ஜிபி + 256ஜிபி - ரூ.47,999 இல் இருந்து ரூ.52,999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி - ரூ.50,999 இல் இருந்து ரூ.55,999 ஆகவும் உயர்ந்துள்ளது.

நத்திங் போன் (4ஏ) ஆரம்ப விலை இப்போது ரூ.37,999 இல் தொடங்குகிறது: கடந்த மாத திருத்தத்தை தொடர்ந்து, தற்போது பேஸிக் நத்திங் போன் (4ஏ) மாடலின் விலை அனைத்து வேரியண்ட்களும் ரூ.3,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. 8ஜிபி +128ஜிபி - ரூ.34,999 இல் இருந்து ரூ.37,999 ஆகவும், 8ஜிபி + 256ஜிபி - ரூ.37,999 இல் இருந்து ரூ.40,999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி - ரூ.40,999 இல் இருந்து ரூ.43,999 ஆகவும் உயர்ந்துள்ளது.

கிஸ்பாட்டின் கருத்து: ரூ.49,999 என்கிற புதிய விலையில், நத்திங் போன் (4ஏ) ப்ரோ மாடல் ஆனது இப்போது மிகவும் போட்டி நிறைந்த பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் ஏற்கனவே ஒன்பிளஸ் 15ஆர், ஐக்யூ 15ஆர் மற்றும் ஒப்போ ரெனோ 15 போன்ற மாடல்கள் உள்ளன

மறுகையில் உள்ள நத்திங் போன் (4ஏ) ஸ்மார்ட்போன் ரூ.31,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அந்த விலையிலிருந்து ரூ.6,000 உயர்ந்துள்ளது. இந்த விலைப்பிரிவில் ஏற்கனவே நம்பி வாங்க கூடிய சில தரமான ஸ்மார்ட்போன்கள் உள்ளன - ஒரு பெஸ்ட் ஆல்-ரவுண்ட் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ மற்றும் ஈர்க்கக்கூடிய கேமராக்களை வழங்கும் விவோ வி70 எப்இ. ஆக யாரும் நத்திங் போன் (4ஏ) பக்கம் செல்ல மாட்டார்கள் என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a and Phone 4a Pro Price Hiked Second time in Indian Market See New Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X