Home
Mobile

சாய்ச்சு புட்டான் மச்சான்.. நெஞ்சை பிடிக்கும் விலையில் 2 புதிய Nothing போன்கள்!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் TDRA சான்றிதழ் தளத்தில் தோன்றியுள்ளது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை குறிக்கிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் IMEI சான்றிதழ் தரவுத்தளத்திலும் காணப்பட்டது. ஆக இந்த ஸ்மார்ட்போன் பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் கூறுகையில், நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

நெஞ்சை பிடிக்கும் விலையில் 2 புதிய Nothing போன்கள்!

நத்திங் போன் 4ஏ சீரீஸின் கீழ் ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம், அதாவது நத்திங் போன் 3ஏ சீரீஸ்க்கு பயன்படுத்தப்படும் அதே முறை பின்பற்றப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 4ஏ மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் ஆனது மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டை பெறலாம்.

இது உண்மையாகும் பட்சத்தில் - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டை பயன்படுத்திய நத்திங் போன் 3ஏ சீரீஸ் உடன் ஒப்பிடும் போது - இதுவொரு குறிப்பிடத்தக்க அப்கிரேட் ஆக இருக்கும். மேலும் நத்திங் போன் 4ஏ சீரிஸின் கீழ் உள்ள ப்ரோ மாடல் மட்டுமே இசிம் (eSIM) ஆதரவை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.40,000 - ரூ.45,00 பட்ஜெட்டிலும், நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் ஆனது ரூ.45,000 - ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஆனால் இந்தியாவில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வாங்க கிடைக்கிறது என்பதால், ரூ.50,000 க்குள் என்பது "இப்போதைக்கு" நம்ப முடியாத விலை நிர்ணயமாக இருக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் நான்கு வண்ணங்களில் வரலாம்: பிங்க், ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விரிவான அம்சங்கள் (CMF Headphone Pro Features):
- இது ஏஎன்சி ஆதரவு உடன் வருகிறது, இது தேவையற்ற சுற்றுப்புற ஒலியை 40dB வரை குறைப்பதாக கூறப்படுகிறது
- இதில் ஹைப்ரிட் ஏஎன்சி (Hybrid ANC) அம்சமும் உள்ளது

- இதில் ஒரு ரோலர் டயலும் உள்ளது, இது பயனர்கள் ஒலியளவை சரிசெய்யவும், ஏஎன்சி-ஐ மாற்றவும், இசையை இயக்கவும் அல்லது இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
- எனர்ஜி ஸ்லைடர் (Energy Slider) உள்ளது. இது பயனர்கள் அவர்கள் கேட்கும் டிராக்கின் அடிப்படையில் பாஸ் மற்றும் ட்ரெபிள் நிலைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.

- ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) அல்லது ஏஐ அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்வது போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது.
- விருப்பப்படி கண்ட்ரோல்களை நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) மூலம் கஸ்டமைஸ் செய்யலாம்

- குறைவான சிதைவு மற்றும் கூர்மையான தெளிவுக்காக நிக்கல் பூசப்பட்ட டயாபிராம்களுடன் 40 மிமீ ட்ரைவர்கள் உள்ளன.
- இது SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- ஹை ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் (Hi Res Audio Playback) ஆதரிக்கிறது

- ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 50 மணிநேர டால்க் டைம் (Talk time)
- ஏஎன்சி (ANC - Active Noise Cancellation) இயக்கப்பட்டிருக்கும் போது பிளேபேக் நேரம் 50 மணிநேரமாக குறையும்

- இது ஆடியோ பிளேபேக்கிற்கான யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியையும், சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது.
- ஐந்து நிமிட குவிக் சார்ஜிங் உடன் 5 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
- முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணிநேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
- விலை ரூ.7,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 4a and Phone 4a Pro Chipset Price leaked Launch Expected by March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X