கண்ணா 2 லட்டு வேணுமா.. பட்ஜெட் விலையில் 2 புது Nothing போன்கள்.. அறிமுக தேதி, என்ன மாடல், என்ன விலை?
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் நிறுவனமானது அதன் அடுத்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மார்ச் 2025 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆக நத்திங் போன் 4ஏ சீரீஸ் மாடல்களும் விரைவில் அறிமுகமாகும் என்றும்.. நத்திங் போன் 3ஏ சீரீஸின் கீழ் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்கள் அறிமுகமானதை போலவே நத்திங் போன் 4 சீரிஸின் கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4எ ப்ரோ ஆகிய 2 மாடல்களும் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டதை போலவே நத்திங் போன் 4ஏ சீரீஸின் கீழ் வரும் இரண்டு மாடல்களுக்கான தற்காலிக வெளியீட்டு தேதி ஆன்லைனில் வெளியாகியுள்ளது. எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) பகிர்ந்துள்ள விவரங்களின்படி, கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் வருகிற 2026 மார்ச் மாத தொடக்கத்தில் உலக சந்தைகளில் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தலாம்.
இன்னும் குறிப்பிட்டு பேசிய லீக்கர், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 2026 மார்ச் 5 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதோடு இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துள்ளார். அதன்படி இரண்டு மாடல்களும் UFS 3.1 உஇன்டர்னல் ஸ்டோஎஜ் உடன் வரும் மற்றும் பழைய மாடல்களுடன் ஒப்பிடும் போது சற்றே பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்கள் குறிப்பிடப்படாத ஸ்னாப்டிராகன் சிப்செட்களால் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் இதன் ":முன்னோடிகளை" விட (அதாவது நத்திங் போன் 3ஏ சீரீஸ் மாடல்களை விட) அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படுத்தப்படும் என்பது போல் தெரிகிறது
நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை (அதாவது நத்திங் போன் 3 மாடலுக்கான அடுத்த மாடலை) அறிமுகப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திய வேகத்தில் நத்திங் போன் 4ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது
முன்னதாக வெளியான தகவல், நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறின. பெயர் குறிப்பிடுவது போலவே நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரலாம்? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய தயாரிப்பு பதிவேட்டில் எனர்ஜி லேபிளிங் (EPREL) வலைத்தளத்தில் A069P என்கிற மாடல் நம்பரில் கீழ் ஒரு நத்திங் போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நம்பர் நத்திங் போன் 4ஏ ப்ரோவுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இது 50W சார்ஜிங் ஆதரவுடன் 5080mAh பேட்டரியை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.
மேலும் இந்த பட்டியல், நத்திங் போன் 4ஏ ப்ரோவின் பேட்டரி அதன் ஆரம்ப திறனில் 80 சதவீதத்தை அடைவதற்கு முன்பு 1,400 சார்ஜிங் சுழற்சிகளை தாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் இது பரிந்துரைக்கிறது. இது A முதல் E வரையிலான அளவில் பழுதுபார்க்கும் தன்மையில் C மதிப்பீட்டை காட்டுகிறது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள், செக்யூரிட்டி அப்டேட்கள், சரிசெய்தல் புதுப்பிப்புகள் மற்றும் செயல்பாட்டு புதுப்பிப்புகளை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 4ஏ ப்ரோவில் உள்ள 5,080mAh பேட்டரி ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோவிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.49,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications








