மார்ச் 5 அறிமுகமாகும் Nothing Phone 4a சீரீஸ்.. விற்பனை உறுதி.. முக்கிய அம்சங்கள் லீக்!
நத்திங் நிறுவனம் வருகிற மார்ச் 5, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்பான முக்கியமான விஷயத்தை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4எ ப்ரோ என்கிற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வழக்கம் போலவே இம்முறையும் நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதும், அவைகள் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

நத்திங் நிறுவனத்தின் இந்த புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக பிளிப்கார்ட் மைக்ரோசைட் தற்போது நேரலையில் உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதுவரை வெளியான அனைத்து நத்திங் தயாரிப்புகளுமே பிளிப்கார்ட் வழியாகவே ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளன. எனவே நத்திங் போன் 4ஏ சீரிஸிலும், நத்திங் இந்த போக்கை தொடர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இருப்பினும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் ஆனது நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4எ ப்ரோ ஆகிய மாடல்களின் விலை நிர்ணயம் அல்லது முழு அம்சங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் முன்கூட்டிய ஆர்டர்கள் மற்றும் முதல் விற்பனை குறித்த விவரங்கள் விரைவில் நேரலைக்கு வரக்கூடும் என்பதை பிளிப்கார்ட் லிஸ்டிங் சுட்டிக்காட்டுகிறது.
இதுவரை நமக்கு தெரிந்தவற்றின் (லீக்ஸ் விவரங்களின்) அடிப்படையில், நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 12GB RAM உடன் இணைக்கப்படலாம். இது ஒரு பெரிய 5,080mAh பேட்டரியை பேக் செய்யலாம், இது 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.
இந்த மாடல் ஆண்ட்ராய்டு 16 OS அடிப்படையிலான நத்திங் OS கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்க வாய்ப்புள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில் இது 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம் - பிளாக் மற்றும் ஒயிட்.
குறிப்பாக நத்திங்கின் சிக்னேச்சர் டிசைனான டிரான்ஸ்பரென்ட் டிசைனையும் நாம் எதிர்பார்க்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போன் Glyph LED லைட்டிங் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ மாடலை போலவே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.
முன்னதாக அறிமுகமான நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








